»   »  தெலுங்கிலும் சந்திரமுகி

தெலுங்கிலும் சந்திரமுகி

Subscribe to Oneindia Tamil
சந்திரமுகி படம் தெலுங்கிலும் தயாராகிறது. இதற்கான பூஜை அண்மையில் நடந்தது.

ரஜினி, பிரபு, ஜோதிகா, நயனதாரா ஆகியோர் நடிக்கும் சந்திரமுகி படத்தை பி.வாசு இயக்குகிறார். இந்தப் படத்தின் கதைமலையாளத்தில் வெளியான மணிச்சித்ரதாழ் படத்தில் இருந்து சுடப்பட்டது என்று பிரச்சினை எழுந்தது. அந்தப் பிரச்சினைஅப்படியே அமுக்கப்பட்டுள்ளது. எப்போது மீண்டும் வெடிக்குமோ தெரியாது.

இப்போது தமிழில் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. ரஜினிக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருப்பதால் இதைதமிழோடு சேர்த்து தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

தெலுங்கு பதிப்பிற்காக பூஜை அண்மையில் நடந்தது. இதில் ரஜினியையும் தயாரிப்பாளர்களான பிரபு, ராம்குமாரை வாழ்த்துதெலுங்குத் திரையுலகின் ஸ்டார்கள் குவிந்தனர்.

பூஜையில் ரஜினிக்கு அடுத்தபடியாத ஸ்டார் அட்ராக்சனாக இருந்தது நயனதாரா தான். நீல வண்ண சேலையில் அசத்தினார்.ஏனோ தெரியவில்லை ஜோதிகா வரவில்லை. அவரது ரோலை தெலுங்கில் வேறு யாராவது செய்யப் போகிறார்களோ?

சந்திரமுகியை மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்திரும் நயனதாராவை பூஜைக்கு வந்த ஓல்டு மற்றும் இளம் தெலுங்கு திரையுலகஜாம்பவான்கள் வைத்த கண் எடுக்காமல், நன்றாகவே பார்த்துவிட்டு சென்றனர். விரைவில் தெலுங்கிலும் நயனுக்கு சினிமாவாய்ப்புக்கள் குவிந்தாலும் ஆச்சரியமில்லை.

ரஜினியுடன் நடிப்பதை கடவுள் கொடுத்த வரமாகவே கருதும் நயனதாரா, படப்பிடிப்பின்போது ரஜினி தனக்கு பலஉபயோகமான விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததாகக் கூறுகிறார்.

சந்திரமுகியின் தமிழ் சூட்டிங்கை ஹைதராபாத்தில் 21 நாட்கள் முடித்து விட்டு யூனிட் இப்போது தான் சென்னைதிரும்பியிருக்கிறது. இந்த சூட்டிங்குக்கு இடையில் தான் தெலுங்கு பதிப்புக்கான பூஜை நடந்தது.

இந்த 21 நாட்களும் படப்பிடிப்பின்போது, ரஜினி படு உற்சாகமாக இருந்தாராம். படத்தின் தயாரிப்பாளரான பிரபுவை ஜாலியாககலாய்த்து கொண்டே இருந்ததோடு, சண்டை கலைஞர்களிடம், நான் வயசானவன்ப்பா, பார்த்து அடிங்க என்றாராம்.

உடன் நடிக்கும் வடிவேலுவின் காமெடி காட்சிகளை ரசித்து ரசித்து சிரித்தாராம். சூட்டிங் இடைவேளையில் வடிவேலுவை பேசச்சொல்லி ரசிப்பதுதான் ரஜினியின் முக்கிய பொழுதுபோக்காக இருந்திருக்கிறது.

படத்தில் ரஜினியை இளமையாகக் காட்ட தினமும் ஒரு மணி நேரம் மேக்கப் நடந்ததாம். இதுவரை 60 சதவீத காட்சிகளைபடமாக்கியிருக்கிறார்கள். கிளைமாக்ஸ், வெளிநாட்டில் ஒரு பாடல் காட்சி மற்றும் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்படவேண்டியிருக்கிறது.

அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் 12ம் தேதி மீண்டும் ஹைதராபாத்திலேயே தொடங்குகிறது. அதுவரை சென்னையில் டப்பிங்வேலை நடக்கிறது.

இதற்கிடையே சந்திரமுகி படத்திற்குப் பிறகு எடிட்டர் மோகனின் தயாரிப்பில் அவரது மகன் ஜெயம் ராஜ் இயக்கும் ஒரு படத்தில்ரஜினி நடிக்கிறார். மகன் ரவியை வைத்து ஜெயம், எஸ்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படங்களைத் தயாரித்தவர் இந்த மோகன்.

பல்வேறு காரணங்களால் ஜக்குபாய் கைவிடப்பட்ட நிலையில், சொந்தமாக எந்த ஒரு படத்தையும் தயாரிப்பதில்லை என்றமுடிவுக்கு வந்துவிட்டாராம் ரஜினி.

இனி தொடர்ந்து அடுத்த நிறுவனங்களின் தயாரிப்புகளில் நடிக்கப் போகும் ரஜினி, கே.பியில் கவிதாலயாவுக்கு ஒரு படம்செய்யப் போகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil