»   »  நயனதாரா.. அன்னப் பறவை

நயனதாரா.. அன்னப் பறவை

Posted By:
Subscribe to Oneindia Tamil
சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடி என்பதால் ரொம்ப சந்தோஷத்தில் இருந்தார் நயனதாரா.

ஆனால் உண்மையில் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் ஜோதிகாவுக்குத்தான் நடிப்பில் ஸ்கோர் செய்ய வாய்ப்பு அதிகம் என்று அறிந்ததும்சோர்ந்து போயுள்ளாராம்.

பி.வாசு இயக்கத்தில், சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் சந்திரமுகியில் ரஜினிக்கு ஜோடியாக கேரளத்து சிட்டு நயனதாராநடிக்கிறார். ரஜினியுடன் ஜோடி சேர பல முன்னணி நடிகைகளும் போட்டி போட்ட நிலையில் ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாகநடிக்க வந்த நயனதாராவுக்கு திடீரென அந்த லக் அடித்தது.

இதனால் மிகவும் மகிழ்ந்து போனார். பிரபுவுக்கு ஜோடியாக சிம்ரனுக்குப் பதிலாக ஜோதிகா நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதில் ஜோதிகாவுக்குத்தான் மிக வெயிட்டான கேரக்டராம். நயனதாரா சும்மானாச்சுக்கும் ரஜினியுடன் வருவார், போவாராம். (பாபாவில்மனிஷா வந்த மாதிரி). கூடவே பாடல் காட்சிகளில் ரஜினியுடன் அபினயம் காட்ட வேண்டுமாம்.

அதே நேரத்தில் ஜோதிகாவுக்கு படு அட்டகாசமான ரோலாம். நடிப்பில் மெருகு கூடிவிட்ட ஜோதிகா செட்டில் வெளுத்து வாங்க,நயனதாரா வெறுத்துப் போய் இயக்குனர் வாசுவிடம் சண்டைக்கே போய்விட்டாராம்.

எந்தா சாரே என்று மலையாளத்திலேயே விசனப்பட்டுள்ளார் நயனதாரா. அவரை மலையாளத்திலேயே சமாதானப்படுத்திய வாசு(இவரும் பூர்வீகம் கேரளா தான்), ஜோதிகாவுக்கு நடிப்புக்கு மட்டும் வாய்ப்புள்ளது.

பாட்டு கிடையாது. ஆனால் படத்தில் எல்லா பாடல்களிலும் நீ தான் இடம் பெறப் போகிறாய். டான்ஸ் மூலமே தமிழ் சினிமாவில் பெரும்பெற்றவர்கள் பட்டியல் இதோ என்று பெரிய லிஸ்டை எடுத்துவிட்டு சமாதானப்படுத்தினாராம் வாசு.

இந்தப் படத்துக்கு ராஜூ சுந்தரம் தான் நடனம் அமைக்கிறார். ரஜினிக்கு அவர் சில ஸ்டெப்சைச் சொல்லி ஆடச் சொல்ல, ரஜினி தவறாகஒரு ஸ்டெப் வைத்தாராம். பின்னர் சரிசெய்து கொண்டு ராஜூ சொன்னது மாதிரி ஆடினாராம்.

ஆனால், ரஜினி முன்பு போட்ட டான்சில் இருந்த ஸ்டைல் ஸ்பாட்டில் இருந்த அனைவருக்கும் பிடித்துப் போய்விட, சார்.. நான் சொன்னஸ்டெப் வேண்டாம். இப்போ நீங்க போட்டீங்களே ஒரு டான்ஸ் அதையே வச்சுக்குவோம் என்று சொல்லிவிட்டாராம் ராஜூ.

என்னப்பா.. அப்ப படத்துல உனக்கு வேலையே இல்லையா என்று கிண்டல் அடித்தாராம் ரஜினி.

இப்படி நிறைய சுவரஸ்யங்களுடன் போய்க் கொண்டிருக்கிறதாம் சந்திரமுகி..

சரத்குமார், ரஜினி என வயதான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தாலும் நயனதாராவின் சிக் அழகு நம் இளம் கதாநாயகர்களையும் சுண்டிஇழுத்துவிட்டது.

சுசிகணேசன் இயக்கும் சக்கர என்ற படத்தில் பிரஷாந்துக்கு ஜோடியாக நயனதாரா நடிக்கிறார்.

அதே போல ப்ரிய சகி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க இருந்தது நயனதாரா தான். ஆனால், சந்திரமுகி முடியும் மட்டும் கால்ஷீட்தர முடியாது என்பதால் சதாவைப் போட்டார்களாம்.

ஆனாலும் அடுத்து ஒரு படத்தில் நயனதாராவுடன ஜோடி போடுகிறார் மாதவன். இதே போல மேலும் 2 வாய்ப்புக்களும் வந்துள்ளன.ஆனால், அடுத்த 6 மாதத்துக்கு டேட்ஸ் இல்லாததால் அவர்களை காத்திருக்கச் சொல்லியிருக்கிறாராம்.

நயனதாரா என்றால் அன்னப்பறவை என்று அர்த்தமாம்....

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil