»   »  பூகம்பம் - தப்பிய தனுஷ், நயனதாரா

பூகம்பம் - தப்பிய தனுஷ், நயனதாரா

Subscribe to Oneindia Tamil

யாரடி நீ மோகினி படப்பிடிப்புக்காக பாங்காக்கில் முகாமிட்டுள்ள தனுஷும், நயனதாராவும் அங்கு ஏற்பட்ட பூகம்பத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளனர்.

செல்வராகவனின் உதவியாளர் ஜவஹர் இயக்கத்தில், தனுஷ், நயனதாரா ஜோடியாக நடிக்கும் படம் யாரடி நீ மோகினி. தெலுங்கில் செல்வா இயக்கி வெற்றி பெற்ற அடவரி மடகலு வெருலே படத்தின் ரீமேக்தான் யாரடி நீ மோகினி. இப்படத்தை கஸ்தூரி ராஜா தயாரிக்கிறார்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் நடந்து வருகிறது. கடந்த 15 நாட்களாக இதற்காக அங்கு முகாமிட்டுள்ள படக்குழுவினர் பாங்காக்கில் உள்ள அழகிய கடற்கரைகளில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.

2 நாட்களுக்கு முன்பு சதான் என்ற இடத்திற்கு படக்குழுவினர் சென்று படப்பிடிப்பு நடத்தினர். அப்போது அப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமி குலுங்கியதால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அப்பகுதியில் இருந்தவர்கள் அலறி அடித்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். பூகம்பம் காரணமாக அங்குள்ள சில கட்டடங்கள் தடதடவென்று அதிர்ந்ததாம். அதிர்ந்த கட்டடடங்களில், தனுஷ், நயனதாரா உள்ளிட்டோர் தங்கியிருந்த ஹோட்டலும் ஒன்று.

அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலிலும் அதிர்வு பலமாக இருந்ததால், படப்பிடிப்புக் குழுவினர் பயந்து போயினர். உடனடியாக தனுஷ், நயனதாரா உள்ளிட்டோர் அங்கிருந்து வெளியேறினர். படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

இந்தத் தகவல்களை படத்தின் பி.ஆர்.ஓ. நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பத்திரமாக படப்பிடிப்பை முடிச்சுட்டு வாங்கப்பா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil