நயன்தாராவை பார்த்ததுமே அலைமோதிய கூட்டம்; காருக்குள் ஏற முடியாமல் சிக்கித் தவித்த விஜய்சேதுபதி!

சென்னை: நானும் ரெளடி தான் படத்தோட ஷூட்டிங் நடந்த அதே புதுச்சேரியில் தான் மீண்டும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தோட ஷூட்டிங்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் நடத்தி வருகிறார்.

Recommended Video

NAYAN -யை பார்க்க திரண்ட கூட்டம் | kathuvakkula Rendu Kadhal, Vijaysethupathi

சமீபத்தில் அங்கே ஷூட்டிங் நடத்த அதிக தொகை வசூல் செய்யப்படுகிறது என்றும் அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் விஜய்சேதுபதி நேரடியாக முதல்வர் ரங்கசாமியை பார்த்தே கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை பார்த்த ரசிகர்கள் பெருந்திரளாக கூட, கூட்ட நெரிசலில் சிக்கியபடியே நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதி காருக்குள் ஏறும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

விக்னேஷ் சிவன் படம்

விக்னேஷ் சிவன் படம்

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்த நானும் ரெளடி தான் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்த படத்தில் காது கேளாத காதம்பரியாக நடிகை நயன்தாரா நடிப்பில் மிரட்டி இருந்தார். அனிருத் இசையில் அனைத்து பாடல்களுமே ஹிட் அடிக்க நானும் ரெளடி தான் படம் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு கோலிவுட்டில் சிகப்பு கம்பள வரவேற்பை அளித்தது.

ஓகேவான காதல்

ஓகேவான காதல்

அந்த படம் மட்டுமல்ல இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு அந்த படத்தில் நடித்த லேடி சூப்பர்ஸ்டாரும் ஓகே ஆனது தான் மிகப்பெரிய மகிழ்ச்சி. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வரும் நிலையில், சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தமே முடிந்து விட்டது என்பதையும் நடிகை நயன்தாரா விஜய் டிவியில் வெளியான பேட்டி மூலம் அறிவித்தார்.

மீண்டும் அதே டீம்

மீண்டும் அதே டீம்

மீண்டும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்க அவர்களுடன் நடிகை சமந்தாவும் இணைந்துள்ள படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்திற்கும் ராக் ஸ்டார் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். அவர் இசையில் வெளியான ரெண்டு காதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

புதுச்சேரியில் ஷூட்டிங்

புதுச்சேரியில் ஷூட்டிங்

நானும் ரெளடி தான் படத்தின் பெரும்பகுதி புதுச்சேரியில் தான் ஷூட் செய்யப்பட்டது. இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பையும் இயக்குநர் விக்னேஷ் சிவன் பாண்டிச்சேரியிலேயே நடத்தி வருகிறார். நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா நடிக்கும் காட்சிகள் அங்கு தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.

முதல்வருடன் சந்திப்பு

முதல்வருடன் சந்திப்பு

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சமீபத்தில் நடிகர் விஜய்சேதுபதி நேரடியாக சந்தித்து உரையாற்றிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. முன்பெல்லாம் அங்கே ஒரு நாள் படப்பிடிப்பு நடத்த 5000 ரூபாய் மட்டுமே பெறப்பட்ட நிலையில், தற்போது 28 ஆயிரம் ரூபாய் வாங்குகின்றனர். இதற்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா? என்கிற கோரிக்கையை முதல்வரிடம் விஜய்சேதுபதி வைத்ததாக கூறப்படுகிறது.

நெரிசலில் சிக்கிய நயன்தாரா

இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்புக்கு சென்று திரும்பிய நிலையில், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை பார்த்த ரசிகர்கள் பெரும் கூட்டமாக அவரை சூழ்ந்து கொண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கிய நயன்தாரா ரொம்பவே கஷ்டப்பட்டு தனது காருக்குள் ஏறினார். ஆனாலும், தனது ரசிகர்களை பார்த்து புன்னகைத்தும், கையசைத்தும் காரை மெதுவாக செலுத்த சொல்லியும் நயன்தாரா செய்த சூப்பரான விஷயம் ரசிகர்கள் மத்தியில் லேடி சூப்பர்ஸ்டாரின் இமேஜை மேலும் உயர்த்தி உள்ளது. அதன் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மாட்டிக்கிட்ட விஜய்சேதுபதி

மாட்டிக்கிட்ட விஜய்சேதுபதி

அதே போல நடிகர் விஜய்சேதுபதி தனது காருக்குள் ஏறுவதற்குள் ஏகப்பட்ட ரசிகர்கள் மக்கள் செல்வனையும் சூழ்ந்து கொண்டனர். அங்கிருந்து சிரித்தபடியே தனது ரசிகர்களுக்கு கை கொடுத்துக் கொண்டும் அனைவரை பார்த்து கை அசைத்தபடியும் தனது காருக்குள் ஏறி கிளம்பினார் விஜய்சேதுபதி.

சமந்தா எங்கேப்பா

சமந்தா எங்கேப்பா

விஜய்சேதுபதி மற்றும் நயன்தாராவை சந்தித்த ரசிகர்கள் நடிகை சமந்தா எங்கேப்பா காணவில்லை என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். சகுந்தலம் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள நடிகை சமந்தா அதன் டப்பிங் பணிகளை முடித்து விட்டு விரைவில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிடி நாயகி

ஒடிடி நாயகி

இன்னொரு பக்கம் மூக்குத்தி அம்மனை தொடர்ந்து நெற்றிக்கண் படத்தையும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியிட்ட நடிகை நயன்தாராவை ஒடிடி நாயகி என்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அழைத்து வருகின்றனர். நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் தியேட்டரில் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X