»   »  இது காதல் தூவானம் ..

இது காதல் தூவானம் ..

Subscribe to Oneindia Tamil

இதமான சாரல் மழையாக, இளசுகளின் இதயங்களை வருட வருகிறது தூவானம்.

இரட்டை இயக்குநர்கள் ஹரிசரண், நியூட்டன் இயக்கத்தில் உருவாகும் வித்தியாசமான காதல் கதைதான் தூவானம். இது படம் அல்ல ஒரு அழகான நாவல். விறுவிறுப்பான கதையோட்டத்துடன் கூடிய இந்தப் படம் இளைஞர்களுக்கு எங்களின் சமர்ப்பணம் என்கிறார்கள் இந்த இரட்டை இயக்குநர்கள்.

கதை ரொம்பச் சின்னதுதான். வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவன் கார்த்தி. அனுவைப் பார்த்ததும் அவள் மீது காதல் கொள்கிறான். ஆனால் கார்த்தியின் காதலை ஏற்க மறுக்கிறாள் அனு. சிரமப்பட்டு அவளை சமாதானப்படுத்தி காதலை ஏற்க வைக்கிறான் கார்த்தி.

ஒரு நாள் கார்த்தியின் நண்பர்கள் கைக்கு ஒரு அழைப்பிதழ் கிடைக்கிறது. அதைப் பார்க்கு அவர்கள் அதிர்ந்து போகின்றனர். கார்த்திக்கும், இன்னொரு பெண்ணுக்கும் கல்யாணம் என சொல்கிறது அந்த அழைப்பிதழ்.

பதறிப் போகும் அவர்கள் அனுவிடம் மேட்டரை உடைக்கின்றனர். குழம்பிப் போன அனு, கார்த்தியின் காலரைப் பிடித்து நியாயம் கேட்கிறாள். ஆனால் இது பொய்யான தகவல் என்கிறான் கார்த்தி. அத்தோடு இல்லாமல், அழைப்பிதழில் கல்யாணம் என்று போட்டுள்ள அதே நாளில், அன்று முழுவதும் உன்னுடனேயே இருப்பேன். நம்பு என்கிறான்.

இதை ஏற்பதா, வேண்டாமா என்று குழம்பும் அனு, ஒரு வழியாக சமாதானமாகிறாள். சொன்னபடி அனுவுடன் கார்த்தி நாளைக் கழிக்கிறானா, காதல் கை கூடியதா அல்லது சோகத்தில் முடிந்ததா?

ஆனால் இது எதுவுமே நடக்காதாம். அப்புறம் என்னதான் ஆகும்? பொருத்திருந்து பாருங்கள் என்று புன்முறுவலுடன் சஸ்பென்ஸ் வைக்கிறார்கள் இரட்டை இயக்குநர்கள்.

இந்தப் படத்தின் கதையை விட நம்மை ரொம்பக் கவருவது நாயகி நேத்ராதான். நேந்திரம் வாழைப்பழம் போல அப்படி ஒரு நெகுநெகு. அதீத அழகும் இல்லை, அடிக்கும் கலரும் இல்லை. மெல்லிய மாநிறத்தில் சொக்க வைக்கிறார் நேத்ரா.

அவரது சிம்பிள் முகத்தை கொஞ்சம் உற்றுப் பார்த்தால், சிலீர் என ஊடுறுவுகிறது, அவரது சில்வண்டுக் கண்கள். அந்தக் கண்களில் ஒரு காதல் யாத்ரா போவதையும் சைடில் பார்க்கலாம்.

தாபம், சோகம், மலர்ச்சி, மகிழ்ச்சி என படு கலவையாக காணப்படும் நேத்ரா, தமிழ் சினிமாவுக்கு ஒரு ஆச்சர்ய வரவாக இருப்பார். அவரது நடிப்பைப் பார்த்தால் இது முதல் படமா என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுக் கேட்பார்கள் என இரட்டை இயக்குநர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.

சிம்பிளாக இருந்தாலும் ஜில்லென இருக்கும் நேத்ராவின் பூர்வீகம் எது தெரியுமோ? அதே! அதே!! கேரளத்து கில்லிதான் இந்த நேத்ரா.

நேத்ராவுக்கு ஜோடியாக நடிப்பவர் ஆதித்யா. இவரும் புதுமுகம்தான். கேரளத்து ஐசக் தாமஸ் கொடுக்காப்பள்ளி இசையமைக்கிறார். மது அம்பட் கேமராவைக் கையாளுகிறார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாம். மே மாத இறுதியில் ரிலீஸாகுமாம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil