»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கோடம்பாக்கம் கலகலப்புக்குத் திரும்பி வருகிறது. வெள்ளிக்கிழமை மட்டும் நான்குபுதிய படங்களுக்கு பூஜை போடப்பட்டது.

தமிழி சினிமாஉலகில், ஒரே நாளில் பல படங்களுக்குப் பூஜை போடுவதுமுன்பெல்லாம் சாதாரணமான விஷயம். ஆனால் சமீப வருடங்களாக இது தலைகீழாகமாறி விட்டது.

சென்ற ஆண்டு பல பிரச்சனைகள் காரணமாக தமிழகத்தில் படப்பிடிப்புபாதிக்கப்பட்டிருந்தது. பின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டது. தற்போது சுறுசுறுப்பாக புதியபடங்கள் துவக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.

சென்ற 14-ம்தேதி தை மாதம் பிறந்தது. தை பிறந்தால் வழி பிறக்கும் என கூறுவார்கள்.அது சினிமா உலகத்துககும் பொருந்தும் போலிருக்கிறது. தை மாதத்தின் முதல்வெள்ளியன்று சென்னையில் 4 புதிய படங்களுக்கு பூஜை போடப்பட்டது.

வெள்ளிக்கிழமை கவிதாலயா தயாரிப்பில் கே. பாலச்சந்தர் இயக்கும் 100-வதுபடமான பார்த்தாலே பரவசம் திரைப்படத்தின் துவக்க விழா நடந்தது.

நொடித்த நிலையில் உள்ள தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் தனது மகன் எபிகுஞ்சுமோனை வைத்து இயக்கும் சுவாசம் என்ற படத்தின் பூஜையும் வெள்ளிக்கிழமைபோடப்பட்டது. இவர், கோடீஸ்வரன் என்ற படத்தை தயாரித்தார். அந்த படம்பாதியிலேயே நின்று விட்டது.

ஏ.எல் அழக்கப்பன் தயாரிக்க நெப்போலியன் - உதயா கதாநாயகர்களாக நடிக்கும்கலகலப்பு என்ற படத்தின் துவக்க விழா பொட்டானிக்கல் கார்டனில் தமிழக அமைச்சர்ஆற்காடு வீராசாமி தலைமையில் நடந்தது.

காதல் தேசம் படத்தை இயக்கிய இயக்குனர் கதிர், மீண்டும் ஒரு காதல் கதையைபடமாக்க வருகிறார். இதற்குப் பெயர், காதல் வைரஸ். கதரின் சொந்தத் தயாரிப்பு இது.இதற்கான துவக்க விழா பிரசாத் ஸ்டூடியோவில் நடந்தது.

மீண்டு வருகிறது கோடம்பாக்கம். ரசிகர்களுக்கு இது சந்தோஷமான செய்திதானே?

Read more about: chennai, cinema, new films, tamilandu
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil