twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னி.. நிகிலா வேலை வெட்டி இல்லாவிட்டால் சினிமால போய் சேரு என்று சொல்லப்பட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது.படித்த, விவரமான, ஆட்களுக்கே இப்போது தமிழ் சினிமாவில் இடம். வித்தியாசமான திங்கிங், திறமை,தகுதிகளோடு பலரும் கோலிவுட்டுக்குள் புகுந்து கலக்கி வருகிறார்கள்.அந்த வகையில் சி.எம். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய்சாந்தி தயாரிக்கும் பொன்னி என்ற படத்தில் எம்பிஏபடித்த கண்ணன் உள்ளிட்ட இளைஞர்கள் அறிமுகமாகிறார்கள்.இதில் கண்ணன், பூஜா, கவின் என இளமைப் பட்டாளம் களமிறங்குகிறது. மலையாளத்தில் ஐந்தாறு படங்களில்தலைகாட்டிய நிகிலா இந்தப் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்தப் படத்தின் பூஜை ஏவி.எம் ஸ்டுடியோவில் நடந்தது. எஸ்.ஏ. சந்திரசேகர், இப்ராகிம் ராவுத்தர், அலெக்ஸ்உள்ளிட்ட திரையுலக விஐபிக்கள் பங்கேற்றனர்.படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கப் போவது விஜய் சந்திரன். இவர் எஸ்.ஏ.சந்திரசேகர், மறைந்தகலைவாணன் கண்ணதாசன், பாண்டியராஜன் ஆகியோரிடம் அஸிஸ்டெண்ட் டைரக்டராக இருந்தவர். படத்துக்குஇசை செளந்தர்யன். ஒளிப்பதிவை போஸ் கவனிக்க, ஆட்டுவிக்கப் போவது (நடனம்) ஜான் பாபு.முத்துலிங்கம், முத்துக்குமார் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சியைகவனிக்கவுள்ளார்.இதில் நடிக்கும் கண்ணனுக்கு இது இரண்டாவது படம். ஏற்கனவே கொஞ்சிப் பேசக் கூடாதா என்ற படத்திலும் புக்ஆகி சூட்டிங் போய்க் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த படமும் தேடி வந்துவிட்டது. இதைத் தவிர ஸ்டான்லிஇயக்கும் கிழக்குக் கடற்கரைச் சாலை படத்திலும் புக் ஆகியுள்ளார். இதில் அறிமுகமாகும் நிகிலா ஏற்கனவே மலையாளத்தில் நடித்தவர் தான். மலையாளத்தில் 4 படம்நடித்துவிட்டால் உடனே கோலிவுட்டுக்கு டிரெயின் ஏறிவிட வேண்டும் என்ற சாஸ்திர சம்பிரதாயத்தின்படிநிகிலாவும் டிக்கெட் வாங்கி இங்கு வந்திறங்கிவிட்டார்.பளீரென இருக்கும் நிகிலாவுக்கு தமிழில் முன்னணிக்கு வர ரொம்ப ஆசையாம். அதற்கு இந்த பொன்னி படவாய்ப்பை முழுமையாக பயன்படுத்தப் போகிறாராம்.ஹீரோவாக அறிமுகமாகும் கண்ணனுக்கு சினிமாவே மூச்சு அண்ட் பேச்சு. இதில் அறிமுகமாகும் இன்னொருகீரோயினி (கோலிவுட்டு பாஷை) பூஜாவுக்கு சொந்த ஊர் பெங்களூராம். அந்த ஊர் தக்காளி மாதிரியேபப்..பளபள என இருக்கிறார்.நிகிலா, கண்ணன், பூஜா, கவீன் ஆகியோருக்கு இடையே நடக்கும் இளமை கலந்த கலாட்டாக்கள் தான் படத்தின்கதையாம். ரொம்ப பிரஷ்ஷான ஸ்டோரி லைன்.. இம்ப்ரசிவான கதை என்கிறார் கண்ணன்.கண்ணாபின்னாவென படத்தின் தலைப்புகள் வந்து கொண்டுள்ள நிலையில் படத்துக்கு பொன்னி என்று நல்லதமிழ்ப் பெயர் வைத்துள்ள இயக்குனருக்கு தைரியம் ரொம்ப சாஸ்தி...சூட்டிங் விசாகப்பட்டிணம், சென்னை, கேரளா பக்கம் நடக்கப் போகிறது. பாடல் காட்சிகளுக்காக வெளிநாட்டுலொகேசன்கள் பார்த்து விட்டார்களாம். பார்த்துருவீங்களே..

    By Staff
    |

    வேலை வெட்டி இல்லாவிட்டால் சினிமால போய் சேரு என்று சொல்லப்பட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது.

    படித்த, விவரமான, ஆட்களுக்கே இப்போது தமிழ் சினிமாவில் இடம். வித்தியாசமான திங்கிங், திறமை,தகுதிகளோடு பலரும் கோலிவுட்டுக்குள் புகுந்து கலக்கி வருகிறார்கள்.

    அந்த வகையில் சி.எம். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய்சாந்தி தயாரிக்கும் பொன்னி என்ற படத்தில் எம்பிஏபடித்த கண்ணன் உள்ளிட்ட இளைஞர்கள் அறிமுகமாகிறார்கள்.

    இதில் கண்ணன், பூஜா, கவின் என இளமைப் பட்டாளம் களமிறங்குகிறது. மலையாளத்தில் ஐந்தாறு படங்களில்தலைகாட்டிய நிகிலா இந்தப் படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.


    இந்தப் படத்தின் பூஜை ஏவி.எம் ஸ்டுடியோவில் நடந்தது. எஸ்.ஏ. சந்திரசேகர், இப்ராகிம் ராவுத்தர், அலெக்ஸ்உள்ளிட்ட திரையுலக விஐபிக்கள் பங்கேற்றனர்.

    படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கப் போவது விஜய் சந்திரன். இவர் எஸ்.ஏ.சந்திரசேகர், மறைந்தகலைவாணன் கண்ணதாசன், பாண்டியராஜன் ஆகியோரிடம் அஸிஸ்டெண்ட் டைரக்டராக இருந்தவர். படத்துக்குஇசை செளந்தர்யன். ஒளிப்பதிவை போஸ் கவனிக்க, ஆட்டுவிக்கப் போவது (நடனம்) ஜான் பாபு.

    முத்துலிங்கம், முத்துக்குமார் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சியைகவனிக்கவுள்ளார்.

    இதில் நடிக்கும் கண்ணனுக்கு இது இரண்டாவது படம். ஏற்கனவே கொஞ்சிப் பேசக் கூடாதா என்ற படத்திலும் புக்ஆகி சூட்டிங் போய்க் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த படமும் தேடி வந்துவிட்டது. இதைத் தவிர ஸ்டான்லிஇயக்கும் கிழக்குக் கடற்கரைச் சாலை படத்திலும் புக் ஆகியுள்ளார்.


    இதில் அறிமுகமாகும் நிகிலா ஏற்கனவே மலையாளத்தில் நடித்தவர் தான். மலையாளத்தில் 4 படம்நடித்துவிட்டால் உடனே கோலிவுட்டுக்கு டிரெயின் ஏறிவிட வேண்டும் என்ற சாஸ்திர சம்பிரதாயத்தின்படிநிகிலாவும் டிக்கெட் வாங்கி இங்கு வந்திறங்கிவிட்டார்.

    பளீரென இருக்கும் நிகிலாவுக்கு தமிழில் முன்னணிக்கு வர ரொம்ப ஆசையாம். அதற்கு இந்த பொன்னி படவாய்ப்பை முழுமையாக பயன்படுத்தப் போகிறாராம்.

    ஹீரோவாக அறிமுகமாகும் கண்ணனுக்கு சினிமாவே மூச்சு அண்ட் பேச்சு. இதில் அறிமுகமாகும் இன்னொருகீரோயினி (கோலிவுட்டு பாஷை) பூஜாவுக்கு சொந்த ஊர் பெங்களூராம். அந்த ஊர் தக்காளி மாதிரியேபப்..பளபள என இருக்கிறார்.

    நிகிலா, கண்ணன், பூஜா, கவீன் ஆகியோருக்கு இடையே நடக்கும் இளமை கலந்த கலாட்டாக்கள் தான் படத்தின்கதையாம். ரொம்ப பிரஷ்ஷான ஸ்டோரி லைன்.. இம்ப்ரசிவான கதை என்கிறார் கண்ணன்.

    கண்ணாபின்னாவென படத்தின் தலைப்புகள் வந்து கொண்டுள்ள நிலையில் படத்துக்கு பொன்னி என்று நல்லதமிழ்ப் பெயர் வைத்துள்ள இயக்குனருக்கு தைரியம் ரொம்ப சாஸ்தி...

    சூட்டிங் விசாகப்பட்டிணம், சென்னை, கேரளா பக்கம் நடக்கப் போகிறது. பாடல் காட்சிகளுக்காக வெளிநாட்டுலொகேசன்கள் பார்த்து விட்டார்களாம். பார்த்துருவீங்களே..

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X