»   »  நிலா நிலா ஓடி வா!

நிலா நிலா ஓடி வா!

Subscribe to Oneindia Tamil

பி.எப். (பெஸ்ட் பிரண்ட் என்கிறார் சூர்யா) படத்தில் நிலா "மெய்" மறந்து நடித்து வருகிறார். ஊடு கட்டி அவர் காட்டும் கவர்ச்சி சூட்டிங் ஸ்பாட்டையேகிடுகிடுக்க வைக்கிறது.

மீரா சோப்ரா என்ற அழகுத் தேவதையை டெல்லியில் இருந்து லவட்டிக் கொண்டு வந்து நிலா என்று பெயர் சூட்டி, களத்தில் இறக்கி விட்டுள்ளார்எஸ்.ஜே.சூர்யா.

பிஎப் படத்தில் ஹீரோயினாக்குவதற்காக மும்பையில் டேரா போட்டு பல மாடல்களைப் பார்த்து யாரும் தேறாத நிலையில், ஏர் போர்ட் அருகே தம்அடிக்க கடை பக்கம் ஒதுங்கியபோது அங்கு தொங்கிய ஒரு ஆங்கில புத்தகத்தின் அட்டைப் படத்தில் குஜாலாக போஸ் கொடுத்தபடி நின்றிருந்த நிலாவை ஆள்வைத்து, ஆட்டோ வைத்து தேடி, கடைசியில் டெல்லியில் வைத்து கண்டுபிடித்தார் சூர்யா.

பெரும் தேடலுக்குப் பின் சிக்கிய மீராவை ஒரு வழியாக கோடம்பாக்கத்துக்கு அள்ளி வந்து நிலாவாக்கினார். அவரிடம் சின்னப் புள்ளைக போடும் டிரஸ்ஸைகொடுத்து மாட்டச் சொல்லி பல கோணங்களில் படம் பிடித்து ஸ்டில்கள் வெளியிட்டார்.

சூட்டிங்கிலும் இம்புட்டுகானு டிரஸ் தானாம் நிலாவுக்கு. நிலாவும் கொடுத்த டிரஸ்ஸை, முகம் சுளிக்காமல் ((இதையாவது கொடுத்தாரே என்றமகிழ்ச்சியால் இருக்கலாம்) போட்டுக் கொண்டு சூப்பராக நடித்து (?) வருகிறாராம்.

இந்தப் படத்தில் பாதி வரை சிங்கிள் கேரக்டர்களாகவே வரும் கதாநாயகனும் கதாநாயகியும் அடுத்து டபுள் ரோலில் வருவார்களாம். அதாவதுஅவர்களது மனசே கேரக்டர்களாக உருவெடுத்து வருவது போல வித்தியாசமாக திரைக்கதை அமைத்துள்ளாராம் சூர்யா.

சிறிய மன வருத்தத்தால் பிரிந்து போகிற காதலர்களை அவர்களது நினைவுகளே சேர்த்து வைப்பது தான் கதையாம். கேட்க நல்லா தான் இருக்கு...

ரஹ்மான் இசையில் படத்தில் 6 இளமை சொட்டும் பாடல்களாம். கெட்ட டான்ஸ் ஆடப் போகிறார்களாம் நிலாவும் சூர்யாவும். இந்தப் படம் குஷி-பார்ட்2 மாதிரி தான் என்கிறார் சூர்யா.

பாடல் காட்சிகளில், கொஞ்சம் இப்படி என்று சூர்யா தனது கோளாறு பார்வைக்கு ஏற்ப நிலாவை தாராளப்படுத்தினால், அவர் கேட்பதை விடவும்ஜாஸ்தியாகாவே ஒத்துழைப்பு வந்து விழுகிறதாம்.

ஆடல் காட்சிகளில் சூர்யாவைக் கிடுகிடுக்க வைக்கும் நிலாவால் கவர்ச்சிப் பிரளயத்தில் சிக்கி சூட்டிங் ஸ்பாட்டும் கதிகலங்குகிறதாம்.

நிலாவை பத்திரிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்தும்போது இவர் அடுத்த சிம்ரன் என்றார் எஸ்.ஜே.சூர்யா. படத்தின் டைட்டிலிலும் சின்ன சிம்ரன் நிலா என்றுபோடப் போகிறாராம்.

சமீபத்தில் சென்னையில் சூட்டிங் நடந்தபோது சூர்யாவிடம் நெருங்கிய நிலா, என்ன சார், உங்க சிம்ரனை விட நான் நல்லா நடிக்கிறேனா? போதுமான அளவுஎக்ஸ்போஸ் செய்றேனா? என்று நேரடியாக கேட்டாராம்.

நியூ படத்தில் வரும் சூர்யா மாதிரி நிலா கேட்டதற்கு எல்லாம் ம்..ம் என்று மண்டையை மட்டுமே ஆட்டியுள்ளார் சூர்யா.

இதையடுத்து, அப்படின்னா இனிமேல் என்னை சிம்ரனுடன் ஒப்பிடாதீர்கள், அவரை விட நான் டாப் என்றே மற்றவர்களிடம் சொல்லுங்கள் என அன்புக்கட்டளை போட்டாராம்.

அதற்கும் மண்டையை பலமாக ஆட்டி வைத்தாராம் சூர்யா.

நிலாவுக்கும் படத்தில் மேலுதட்டில் ஒரு மச்சத்தை வைத்துவிட்டிருக்கிறார் சூர்யா. எல்லாம் சிம்ரன் சென்டிமெண்ட்.

சூட்டிங்கில் பிஸியாக இருந்த சூர்யாவை அப்படியே ஓரமாய் ஒதுக்கிப் போய் பி.எப். என்ற பெயருக்கு இப்படி எதிர்ப்பு கிளம்பியிருக்கே.. என்ன செய்வதாய்உத்தேசம் என்று கேட்டோம்.

நான் நீண்ட நாட்களுக்கு முன்பே முடிவு செய்து, அதை தயாப்பாளர் கவுன்சிலிலும் பதிவு செய்து விட்டேன். அப்போது யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.ஆனால் படத்தின் பெயர் எல்லா மட்டத்திலும் பிரபலமான பிறகு எதிர்ப்பு தெரிவிப்பதில் என்ன நியாயம்?

எனது படப் பெயரால் தமிழ் மொழி அழிந்து விடாது. இதை சம்பந்தப்பட்டவர்களிடம் நான் தெரிவித்து விட்டேன் என்றார். (பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்தரப்பிடம் சூர்யா பேசி வருவதாகவும் சொல்கிறார்கள்.)

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil