twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெப்சியுடன் 'கா'!: 'யாரை வேண்டுமானாலும் வைத்து ஷூட்டிங் நடத்துவோம்' - தயாரிப்பாளர் சங்கம்

    By Shankar
    |

    சென்னை: 'இனிமேல் பெப்சியுடன் எந்த ஒப்பந்தமும் கிடையாது. யாரை வேண்டுமானாலும் வைத்து தயாரிப்பாளர்கள் ஷூட்டிங் நடத்தலாம்' என்று தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சினிமா தயாரிப்பாளர்களுக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி)யைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் இடையே சம்பள உயர்வு தொடர்பாக பெரும் பிரச்சினை நிலவுகிறது. இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்து முழுமையான உடன்பாடு ஏற்படாத நிலையில், தொழிலாளர்கள் சம்பளத்தை உயர்த்தி, புதிய ஊதியத்தை நிர்ணயித்தனர்.

    'இனிமேல் புதிய சம்பளத்துக்குத்தான் வேலை செய்வோம்' என்றும் அறிவித்தார்கள். இதற்கு, பட அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

    படப்பிடிப்புகள் ரத்து

    இந்த பிரச்சினையில் ஒரு முடிவு எடுப்பதற்காக, பட அதிபர்கள் நேற்று ஒரு நாள் மட்டும் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, பொதுக்குழுவை அவசரமாக கூட்டினார்கள்.

    அதன்படி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டம், சென்னை பிலிம்சேம்பர் திரையரங்கில் நேற்று காலை 10-30 மணிக்கு தொடங்கியது. அதில், 300க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டம், பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. பட அதிபர்கள் காரசாரமாக தங்கள் கருத்துக்களை எடுத்து சொன்னார்கள்.

    தீர்மானங்கள்

    அதன்பிறகு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    மூன்று நாட்களுக்கு முன்பு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை சார்ந்த சங்கங்கள் தன்னிச்சையாக ஒரு ஊதிய உயர்வை நிர்ணயம் செய்து அறிவித்து விட்டார்கள்.

    வழக்கமாக தயாரிப்பாளர்கள் சங்கமும், தொழிலாளர்கள் சம்மேளனமும் கலந்து பேசி, அனைத்து பிரிவுகளுக்கான கையொப்பம் ஆன பிறகுதான் அது ஒப்பந்தம் எனப்படுகிறது. அதை மீறி அவர்கள் தன்னிச்சையாக ஊதிய உயர்வை நிர்ணயம் செய்து அறிவித்திருப்பது, அந்த நடைமுறை வழக்கத்தை மீறிய செயல் ஆகும்.

    இனி ஒப்பந்தம் இல்லை

    ஆகவே இனிமேல் எங்கள் சங்கத்துக்கும், தொழிலாளர் அமைப்புக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை. எங்கள் சங்கத்தின் தயாரிப்பாளர்கள் இனிமேல் தங்கள் இஷ்டப்படி யாரை வேண்டுமானாலும் வைத்து தொழில் செய்து கொள்ளலாம்.

    இதற்கு உடன்பட்டு தொழில் செய்ய வரும் தொழிலாளர்களுக்கு எங்கள் சங்கம் ஒரு குழு அமைத்து, அவர்களது ஊதியத்தை நிர்ணயம் செய்து, அதை அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் அறிவித்து, கண்டிப்பாக அதை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தும்.

    இதை மீறும் தயாரிப்பாளர்களுக்கு எங்களது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எந்தவித ஒத்துழைப்பும் அளிக்காது.

    தயாரிப்பாளர்களின் இந்த புதிய நிலைப்பாடு, தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெப்சி அமைப்பு 24 சங்கங்களின் கூட்டமைப்பாகும்.

    English summary
    The strong Tamil producers council decided engage any one apart from FEFSI members, for the shooting of new films hereafter. This new decision created heated arguments and tension among the film employees.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X