»   »  இந்த 'காலா' ரஞ்சித் சொன்ன பேச்சை கேட்டால் தானே, இப்ப பாருங்க...

இந்த 'காலா' ரஞ்சித் சொன்ன பேச்சை கேட்டால் தானே, இப்ப பாருங்க...

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரஜினிகாந்த் பட ஷூட்டிங் நடக்கும் இடத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறார்கள்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் காலா. படப்பிடிப்பு கடந்த 28ம் தேதி துவங்கியது. சிலரை போன்று ஓவர் பில்ட்அப் கொடுக்காமல், அலப்பரை செய்யாமல் படப்பிடிப்பு துவங்கிய அன்றே சில புகைப்படங்களை வெளியிட்டார் ரஞ்சித்.

மறுநாளும் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டனர்.

கூட்டம்

கூட்டம்

காலா படப்பிடிப்பு மும்பை தாராவி பகுதியில் நடந்து வருகிறது. ரஜினி படம் என்பதை அறிந்து அங்கு கூட்டம் கூடிவிடுகிறது. கூட்ட நெரிசலால் படப்பிடிப்புக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

போலீசார்

போலீசார்

ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் மும்பை போலீசின் உதவியை நாடியுள்ளது படக்குழு. போலீசார் வந்து கூட்டத்தை கட்டுப்படுத்துவதுடன் ரஜினிக்கு பாதுகாப்பு வளையமாக உள்ளனர்.

ரஞ்சித்

ரஞ்சித்

மும்பையில் படப்பிடிப்பு நடத்தினால் ரஜினியை பார்க்க கூட்டம் கூடும். இது எல்லாம் வேண்டாம் செட் போட்டு சென்னையிலேயே எடுக்கலாம் என்று ரஞ்சித்துக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

முடியாது

முடியாது

என் படம் இயல்பாக இருக்க வேண்டும். அதனால் செட் வேண்டாம் மும்பையில் தான் ஷூட்டிங் என்று அடம்பிடித்த ரஞ்சித்துக்கு தற்போது ரசிகர்கள் கூட்டத்தால் இடையூறு ஏற்பட்டுள்ளது.

English summary
Kaala team is having difficult time in Mumbai as fans gather at the shootingspot to have a look at superstar Rajinikanth.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil