»   »  ஆபாச நடனம்: டைரக்டர்-பத்மபிரியாமோதல் சூட்டிங் கேன்சல்

ஆபாச நடனம்: டைரக்டர்-பத்மபிரியாமோதல் சூட்டிங் கேன்சல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரையில் நடந்த படப்பிடிப்பில் இயக்குனர் சாமிக்கும், நடிகை பத்மப்ரியாவிற்கு மோதல் ஏற்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

உயிர் படத்தை இயக்கிய சாமி தற்போது மிருகம் என்ற பெயரில் புதிய படம் தயாரித்து வருகிறார். இதில் பத்மப்ரியாவும், புதுமுகம் ஆதியும் கதாநாயகனாக நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு மதுரையில் நடந்து வந்தது. எய்ட்ஸ் நோயை அடிப்படையாக கொண்ட கதையாம் இது. மனைவி இருக்கும் போது பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் இளைஞன், அவனை திருத்த பாடுபடும் மனைவி, இது தான் கரு.

இதற்காக ஒரு கவர்ச்சிகரமான பாடலை படத்தில் வைத்திருக்கின்றனர். இந்த காட்சியில் ஆதியும் பத்மப்ரியாவும் நடித்தனர். இந்த பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடனம் அமைத்திருந்தார்.

பத்மப்ரியாவுக்கு அவர் ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுத்தார். ஆனால் பத்மப்ரியா அவர் சொல்லி கொடுத்தது போல் நடிக்க மறுத்து விட்டார். அந்த நடன அசைவுகள் படு பச்சையாகவும் படு செக்ஸியாகவும் உள்ளதாகக் கூறி நடிக்க மறுத்தார்.

இதையடுத்து இயக்குனர் சாமி தலையிட்டு பத்மப்ரியாவை சமாதானப்படுத்தி நடிக்க வைக்க முயன்றார். ஆனால் பத்மபரியாவோ இந்த பாடலே, இந்தப் படத்திற்கு தேவையில்லை என வசனம் பேசியுள்ளார்.

படத்தை எப்படி எடுப்பது, எந்தப் பாடலை வைப்பது என்று எனக்குத் தெரியும் என இயக்குனர் சாமி டென்சனாக அவருக்கும் பத்மப்ரியாவுக்கும் இடையே சூட்டிங் ஸ்பாட்டிலேயே வாய்த் தகராறு ஏற்பட்டது.

இதனால் கோபமடைந்த பத்மப்ரியா படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் சூட்டிங்கும் நின்று போனது.

பத்மப்ரியாவை சமாதானப்படுத்தி நடிக்க வைக்கும் முயற்சி தோல்வியடைந்ததால் மிருகம் படப்பிடிப்பே நிறுத்தப்பட்டுள்ளதாம்.

இதுபற்றி பத்மப்ரியாவிடம் கேட்டபோது, தவமாய் தவமிருந்து படத்தில் குடும்ப பாங்காய் நடித்தேன். அதில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அது போன்ற கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். பட்டியல் படத்தில் மட்டும் தான் ஒரு பாட்டில் கவர்ச்சியாக நடித்தேன். மற்ற படங்களில் அரைகுறை ஆடையுடன் நடிக்கவில்லை.

இயக்குனர் சாமி மிருகம் கதை சொன்ன போது பிடித்திருந்தால் ஒப்புக் கொண்டேன். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என அப்போதே கூறியிருந்தேன். இயக்குனரும் கவர்ச்சியான காட்சிகள் எடுப்பதில்லை என கூறினார்.

ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதியை மீறி, டான்ஸ் மாஸ்டர் ஆபாசமாக மூவ் மெண்ட்ஸ்களை சொல்லிக் கொடுத்தார். அதில் நடிக்க மாட்டேன் என கூறியதற்கு இயக்குனர் என்னை நடிக்குமாறு வற்புறுத்தினார்.

கவர்ச்சியான சீனை எடுக்க மாட்டேன் என கூறிவிட்டு, அப்படி நடிக்குமாறு இயக்குனர் கூறியது எனக்கு கோபத்தை வரவழைத்தது. அதனால் நடிக்க மாட்டேன் என மறுத்துவிட்டேன் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil