»   »  தீபிகா பட செட்டை தீ வைத்து எரித்த கும்பல்: காஸ்ட்லி உபகரணங்கள் எரிந்து நாசம்

தீபிகா பட செட்டை தீ வைத்து எரித்த கும்பல்: காஸ்ட்லி உபகரணங்கள் எரிந்து நாசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கோல்ஹாபூரில் தீபிகா படுகோனே நடித்து வரும் பத்மாவதி பட செட் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாஹித் கபூர், அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோரை வைத்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் வரலாற்று படம் பத்மாவதி.

பத்மாவதி படத்தின் படப்பிடிப்பு தற்போது மகாராஷ்டிராவில் உள்ள கோல்ஹாபூரில் நடந்து வருகிறது.

செட்

செட்

படத்திற்காக கோல்ஹாபூரில் பிரமாண்ட செட் போட்டு காட்சிகளை படமாக்கினர். இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் 40 முதல் 50 பேர் கொண்ட கும்பல் செட்டை தீ வைத்தும் எரித்துள்ளனர்.

நாசம்

நாசம்

விஷமிகளின் தாக்குதலில் பெரும் பொருட்செலவில் போடப்பட்ட செட் எரிந்து நாசமானது. மேலும் செட்டில் இருந்த பல உபகரணங்களும் எரிந்துவிட்டன. நல்ல வேளை இந்த தாக்குதலில் யாரும் காயம் அடையவில்லை.

பத்மினி

பத்மினி

பிரபல ராணி பத்மினி மற்றும் இஸ்லாமிய அரசர் அலாவுதீன் கில்ஜி உறவு கொள்ளும் காட்சி படத்தில் இருப்பதாகக் கூறி ராஜ்புட் கர்ணி சேனா அமைப்பினர் பன்சாலியை முன்பு தாக்கினர்.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் படப்பிடிப்பு நடந்தபோது கர்ணி சேனா அமைப்பினர் அங்கு வந்து அனைவர் முன்பும் பன்சாலியை தாக்கினர். ராணி பத்மினியை அவர் படத்தில் தவறாக காண்பிப்பதாக குற்றம் சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Deepika Padukone and Ranveer Singh starrer Padmavati's sets had been burnt to the ground last night by unknown vandalisers and almost all the equipments and other valuable things have been reduced to ashes.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil