»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

பஞ்ச தந்திரம் ஷூட்டிங் ஜரூராக நடந்து வருகிறது. படத்தில் மொத்தம் 6 ஹீரோயின்கள். அவர்களில் ஒருவர் புதுமுகம். பெயர் வித்யா.மற்றவர்களான ஊர்வசி, ரம்யா கிருஷ்ணன், தேவயானி, சிம்ரன், சங்கவி ஆகியோர் ஏற்கனவே திரை ரசிகர்களுக்குப்பழக்கமானவர்கள்.

பஞ்ச தந்திரத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு கிட்டத்தட்ட வில்லி வேடமாம். கமலுக்கு ஜோடியாக சிம்ரன் வருகிறார். அவரை ஓவர்டேக் செய்து கமலை இழுக்கப் பார்க்கும் வேடத்தில் ரம்யா வருகிறாராம்.

படத்தின் முக்கிய அம்சமாக சிம்ரனும், ரம்யா கிருஷ்ணனும் இணைந்து ஆடும் ஒரு போட்டி நடனம் இருக்கிறதாம். படுவித்தியாசமான முறையில் இந்த டான்ஸ் மூவ்மென்ட்களை மாஸ்டர் பிருந்தா அமைத்திருக்கிறாராம் (நம்மவர் படத்தில் சோடாபுட்டி கண்ணாடியுடன் நாகேஷ் மகளாக வருவாரே அவரேதாங்க).

கவர்ச்சி பிளஸ் கலக்கலாக இந்த டான்ஸ் அமைந்திருக்கிறதாம். படத்தில் எது பேசப்படுகிறதோ இல்லையோ இந்த டான்ஸ்கண்டிப்பாக பிரபலமாகுமாம். இருவர் மட்டுமே ஆடும் வகையில் டான்ஸ் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் கூட கமலையும்இடையில் புகுத்தலாமா என்று இப்போது விவாதம் நடந்து கொண்டுள்ளதாம்.

அட்ரா சக்கை, அட்ரா சக்கை !

Please Wait while comments are loading...