»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு அருமையான மெசேஜ் சொல்பவர் சேரன்.

இவரது இயக்கத்தில் மிக வேகமாக உருவாகி வருகிறது "பாண்டவர் பூமி".

ஏற்கனவே, ஷிவயானிஎன்ற பெயரில் அறிமுகமானவரே ஷமிதா என்ற பெயரில் ஹீரோயினாக நடிக்கிறார்.

அப்பா - மகனாக விஜயகுமார்-அருண்குமார் நடிக்கிறார்கள்.

பெரிய டயலாக்குகளை எல்லாம் ஒரே டேக்கில் பேசி அசத்துகிறாராம் ஷமிதா. இவர் "பொற்காலம்"ராஜேஸ்வரியின் தங்கை.

பச்சானின் பாச்சா பலிக்குமா?

ஒளிப்பதிவாளர்கள் எல்லோரும் ஒளியைப் பதிவுசெய்துதான் தருவார்கள். ஆனால் ஒளியிலேயே ஓவியம்புனைந்து கொடுப்பவர் தங்கர் பச்சான்.

இதனால் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்வதற்காக, தன்னை "ஒளி ஓவியர்" என்றேஅழைத்துக் கொள்கிறார்.

இவர் "அழகி" என்ற படத்தை இயக்கி வருவதும் அதில் "கருப்பழகி" நந்திதாதாஸ் கதாநாயகியாக நடித்து வருவதும்தெரிந்த விஷயம்தான். இந்தப்படத்தில் குட்டி நடிகராக பச்சானின் மகன் அரவிந்த் பச்சான் அறிமுகமாகிறார்.

காட்சிக்குக் காட்சி தன் டைரக்ஷன் மாட்சியை வெளிப்படுத்தியுள்ளாராம் பச்சான். ஒரு படத்தை எப்படி இயக்கவேண்டும் என்பதை, இப்படத்தைப் பார்த்து இயக்குநர் உலகம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பச்சானேசொல்லுகிறாராம்.

ம்ம்ம்..டைரக்ஷனில் பச்சானின் பாச்சா பலிக்குமா? ... பார்க்கலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil