»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

படம் எடுப்பதாக பார்த்திபன் பிரமாண்டமாக அறிவித்துவிட்டு ஊத்தி மூடிய படங்களின் வரிசையில்ஏலேலோவும் சேர்ந்து கொள்ளும் போலத் தெரிகிறது.

ஏற்கனவே சோத்துக்கட்சி, கருப்பண்ணசாமி என இரண்டு படங்களுக்கு பரபரப்பாக விளம்பரங்கள் செய்துபூஜை போட்டார் பார்த்திபன். இவற்றுக்காக ஸ்பெஷல் அழைப்பிதழ்கள் அடித்தார். சென்னை அணாணாசாலையில் வித்தியாசமான கட்-அவுட்கள் வைத்தார்.

பத்திரிக்கைகளிலும் விளம்பரங்கள் தந்தார், ஆனால், ஒரு ஷாட் கூட எடுக்காமல் அவை ஏறக்கட்டப்பட்டுவிட்டன.

இதே வரிசையில் தற்போது ஏலேலோவும் சேர்ந்து கொண்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகப்போகும் முதல் பார்த்திபன் படம் என்றெல்லாம் இதற்கு விளம்பரமும் தரப்பட்டது. இதற்காக ரஹ்மான்-பார்த்திபன் போட்டோ செஷனும் நடந்தது. இருவரும் இணைந்திருக்கும் ஸ்டில்கள் வெளியிடப்பட்டன.

ஆனால், போட்டோவுக்கு போஸ் கொடுத்ததோடு ரஹ்மான் ஒதுங்கிக் கொண்டதாகத் தெரிகிறது. அவர் பாட்டுப்போட்டுத் தரவும் இல்லை. தருவதாக உத்தரவாதமும் தரவில்லை.

இதனால் கொஞ்சம் ஒத்தி வைக்கப்பட்ட ஏலோலோ படத்தை இப்போது மொத்தமாகவே பார்த்திபன் கைவிட்டுவிட்டதாகத் தெரிகிறது. கொஞ்ச நாளைக்கு நடிப்பில் மட்டுமே கவனம் என்ற முடிவுக்கு பார்த்திபன்வந்துவிட்டதாக சொல்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil