»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விக்ரம்- சூர்யா இணைந்து நடித்து பாலா இயக்கியுள்ள பிதாமகன் படம் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. சிலநகாசு வேலைகள் தான் நடந்து கொண்டுள்ளன.

இந் நிலையில் படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் இடையே கடும் போட்டா, போட்டி ஏற்பட்டதால், மிக நல்லவிலைக்கு படத்தை விற்றுள்ளாராம் தயாரிப்பாளர் ஏ.வி.துரை.

சுமார் ரூ. 6 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ. 9 கோடிக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளதாம்.இதனால், தயாரிப்பாளருக்கு சுளையாக ரூ. 3 கோடி தேறிவிட்டதாம்.

அதே நேரத்தில் வினியோகஸ்தர்களுக்கும் வாங்கிய விலையைப் போல பல மடங்கு லாபம் கிடைக்கும்என்கிறார்கள். அந்த அளவுக்கு படம் நன்றாக வந்துள்ளதாம்.

படத்தை நெடு நாட்களாக பாலா எடுத்ததால் செலவும் எகிறிக் கொண்டே போக பாலாவுக்கும்தயாரிப்பாளருக்கும் இடையே மோதல் எழுந்தது. இறுதியில் விக்ரம் தலையிட்டு சமாதானம் செய்ய வேண்டிவந்தது. தேவைப்பட்டால் கூடுதல் பணத்தை தானே போட்டுக் கொள்வதாகக் கூட விக்ரம் சமரசம் பேசினார்.

ஆனால், ஏ.வி.துரையே கூடுதல் செலவையும் ஏற்றுக் கொண்டார். படத்தை முடித்துவிட்ட பாலா சமீபத்தில் அதைதயாரிப்பாளருக்குப் போட்டுக் காட்டியபோது பிரம்மித்துவிட்டாராம். பாலாவை வெகுவாகப் பாராட்டித்தள்ளிவிட்டாராம்.

இதன் பின்னர் தான் நல்ல விலைக்கு படத்தை விற்றுள்ளார். இதையடுத்து பாலாவுக்கும் துரைக்கும் இடையேஇருந்த கசப்புணர்வுகள் கூட மறைந்துவிட்டதாம்.

விரைவில் தயாரிப்பாளர் ஏ.வி. துரையின் நண்பரான ரஜினிக்கு இந்தப் படம் போட்டுக் காட்டப்படவுள்ளது.பாடல்களிலும் பேக்-கிரவுண்ட் இசையிலும் இளையாராஜா அசத்தி எடுத்துள்ளாராம்.

ஆளுக்கு ஒரு வெற்றிகரமான போலீஸ் படத்தை (சாமி, காக்க.. காக்க..) தந்துவிட்டு வந்த கையோடு இதில் மிகவித்தியாசமான வேடங்களில் நடித்துக் கலக்கியுள்ளனர் விக்ரமும் சூர்யாவும்.

இந்தப் படத்துக்குப் பின் அடுத்து எப்படிப்பட்ட படம் செய்வது என்று தெரியாமல் இருவரும் கொஞ்ச காலம்குழம்பப் போவது நிச்சயம் என்கிறார் பாலா சிரித்துக் கொண்டே.

அந்த அளவுக்கு கேரக்டர்களாகவேமாறிவிட்டார்கள் என்கிறார்.

சிம்ரன், லைலா, ரசிகா ஆகியோரும் நடித்துள்ள இந்தப் படம் தீபாவளியன்று ரிலீஸ் ஆகிறது. சேது மற்றும்நந்தாவுக்குப் பின் பாலாவிடம் இருந்து வரும் இந்தப் படத்தை கோலிவுட் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil