»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

இயக்குனர் பாலாவின் பிதாமகன் இசையை மையமாகக் கொண்ட திரில்லர் படமாக உருவாகி வருகிறது.

சூர்யா, விக்ரம், லைலா நடிக்கும் இந்தப் படத்தின் ஸ்டில்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

பாலாவுக்கும் லைலாவுக்கும் ஒரு இடையே லவ் என்று பேசப்பட்டு வரும் நிலையில் மீண்டும் லைலாவை மும்பையில் இருந்துஇழுத்து வந்து நடிக்க வைத்திருக்கிறார் பாலா. இது குறித்துக் கேட்டால் சிரிக்கிறார் பாலா. இந்த கிசுகிசுவை உடைக்கத் தான்அவரை மீண்டும் இழுத்து வந்தேன் என்கிறார். அது சரி!.

தனக்கு மறுவாழ்வு கொடுத்த பாலாவை காக்க வைத்து வெறுப்பேறிய விக்ரம் கடைசியில் தான் கால்ஷீட் கொடுத்தார்.இருந்தாலும் அந்தக் கோபத்தை எல்லாம் மறந்துவிட்டு இருவரும் மீண்டும் சுமூகமாகிவிட்டார்கள்.

பாலா எனது குரு, அவரை மேண்டுமென்றே நான் காக்க வைக்கவில்லை. கால்ஷீட் பிரச்சனை தான் காரணம். அதை அவர்புரிந்து கொண்டுவிட்டதால் இப்போ நாங்க பழையபடி குளோஸ் பிரண்ட்ஸ் என்கிறார். பாலாவிடம் கேட்டால், விக்ரம் என்பிரண்ட் என்கிறார்.

சரி விக்ரமை என் பிரண்ட் என்கிறீர்களே, அப்போ சூர்யா என்று கேட்டபோது அவர் என் தம்பி என்று பதில் தந்தார் பாலா.

சேது, நந்தாவுக்குப் பிறகு பாலாவுக்கு இது மூன்றாவது படம். சேது ஹீரோவையும் நந்தா ஹீரோவையும் லைலாவைவும் சேர்த்துஉருவாக்கி வரும் இந்தப் படம் இன்னொரு போரடிக்கும் முக்கோணக் காதலா? என்று பாலாவிடம் கேட்டபோது ஐயோ, இதுமுக்கோணக் காதல் இல்லீங்க. விறுவிறுப்பான, பரபரப்பான படம் என்கிறார்.

எனது பேவரிட் இசைஞானி தான் இதிலும் இசை. அட்டகாசமாக டியூன்களைத் தந்துள்ளார். அவரை நம்பித் தான் இந்தமியூச்சிக்கல் திரில்லரை எடுக்கிறேன். ஜனவரியில் தான் சூட்டிங்கை ஆரம்பிக்கப் போகிறேன். மடமடவென்று எடுத்து முடித்துஏப்ரலில் தமிழ்ப் புத்தாண்டில் ரிரீஸ் செய்துவிடுவேன் என்கிறார் பாலா.

இன்னொரு ஹீரோயினும் உண்டாம். இன்னும் அது என்று பாலா முடிவு செய்யவில்லை. கிராமத்து சிச்சுவேசனில் வரும் படம்என்கிறார்.

இந்தப் படத்துக்காக ஸ்டில்ஸ் செசன்ஸ் வைத்திருந்தார் பாலா. அதில் எடுக்கப்பட்ட படங்கள் தான் இந்தப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil