»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

டைரக்டர் பாலா இயக்கும் பிதாமகன் படத்தில் நடிப்பதாக இருந்த விஜயசாந்தி இப்போது அதிலிருந்து கழற்றிவிடப்பட்டுள்ளார்.

விக்ரம் மற்றும் சூர்யாவை வைத்து பிதாமகன் படத்தை டைரக்ட் செய்து வருகிறார் பாலா.

இதில் முக்கிய வேடத்தில் நடிகை விஜயசாந்தியை அணுகியுள்ளார். பாலாவை ஏற, இறங்கப் பார்த்துள்ளவிஜயசாந்தி, நடிக்கிறேன், ஆனால் இந்த கண்டிஷன்களை பாலோ பண்ண வேண்டும் என்று கூறி பெரியபட்டியலைப் போட்டுள்ளார்.

வயதான கெட்-அப் கூடாது, கவர்ச்சியான காட்சிகள் இருக்க வேண்டும், படத்தில் எனக்கு முக்கியத்துவம் இருக்கவேண்டும் என்று போனதாம் அந்த பட்டியல்.

அதைக் கேட்டு முடித்தவுடன், விஜயசாந்தியை ஏற, இறங்கப் பார்த்த பாலா, நீங்க என் படத்தில் நடிக்கவேவேண்டாம் என்று கட் அன்ட் ரைட்டாக கூறி விட்டு திரும்பி விட்டாராம்.

ஹீரோவை விட கதையை மட்டுமே நம்பி படம் எடுக்கும் நல்ல இயக்குனர்களில் ஒருவர் பாலா. அவரிடம்விஜய்சாந்தி பாச்சா பலிக்குமா?

"அம்மா" வேடத்தில் ரேகா

கடலோரக் கவிதைகளில் ஜெனீபர் டீச்சராக அறிமுகமாகி, கமல்ஹாசன் வரை ஜோடியாக நடித்து முடித்து சிலஆண்டுகளுக்கு முன் ஓரம் கட்டப்பட்ட நடிகை ரேகா இப்போது அம்மாவாக அவதாரம் எடுத்து தனதுஇரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்குகிறார்.

தமிழ் சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் மலையாளத்தில் நடித்தார். அங்கும் இப்போது வாய்ப்பில்லை. இதனால்கொஞ்ச காலம் அமைதியாக இருந்தார்.

பின்னர், டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். டிவியில் வாய்ப்புகள் அதிகரித்து ஓரளவு செட்டிலாகியுள்ளநிலையில் மீண்டும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்துள்ளது- அம்மா வேடத்தில் நடிக்க.

அருண்பாண்டியன் தயாரித்து, இயக்கும் விகடன் படத்தில் ஹீரோ ஹரீஷ் ராகவேந்திராவுக்கு அம்மாவாகநடிக்கிறார் ரேகா. அருண்பாண்டியனின் அன்புக் கட்டளையால் இந்த ரோலை ஏற்றுக் கொண்டிருக்கிறாராம்.

அம்பிகா, சீதா என புதிய அம்மா நடிகைகள் பட்டியலில் ரேகாவும் சேர்ந்து விட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil