»   »  மீண்டும் 'பொல்லாத' கூட்டணி

மீண்டும் 'பொல்லாத' கூட்டணி

Posted By:
Subscribe to Oneindia Tamil
Danush with Ramya

பொல்லாதவன் படம் பெற்ற வெற்றியால், சந்தோஷமடைந்துள்ள அப்படத்தின் இயக்குநர் வெற்றி மாறனும், நாயகன் தனுஷும் மீண்டும் ஒரு படத்தில் இணைகின்றனர்.

பாலு மகேந்திராவின் சிஷ்யப் பிள்ளைகளில் ஒருவரான வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான முதல் படம் பொல்லாதவன். தனுஷ், திவ்யா, லொள்ளு சபா சந்தானம், கருணாஸ் கூட்டணியில் வெளியான இப்படம் வெற்றிப் படமாகி தனுஷை சந்தோஷப்படுத்தியது.

இந்த நிலையில் தனுஷும், வெற்றி மாறனும் மீண்டும் இணைகின்றனர். இப்படத்தை கதிரேசன் தயாரிக்கவுள்ளார்.

2 நாட்களுக்கு முன்பு இதுதொடர்பான ஒப்பந்தத்தில் தனுஷ் கையெழுத்திட்டுள்ளார்.

இந்தப் படத்தை ஆக்ஷன் கலந்து கொடுக்கவுள்ளனராம். இப்படத்திலும் பொல்லாதவன் யூனிட்டே பங்கேற்கவுள்ளது. படத்தின் நாயகி மட்டும் வேறு. அவரைத் தேடத் தொடங்கியுள்ளனராம்.

பொல்லாதவன் வில்லன்களான கிஷோரும், டேணியல் பாலாஜியும் இப்படத்திலும் இடம் பெறுகிறார்கள். கேமராவுக்கு வேல்ராஜ், இசைக்கு பிரகாஷ் குமார்.

தற்போது தனுஷ் யாரடி நீ மோகினி படத்தின் கடைசிக் கட்ட நகாசு வேலைகளில் மும்முரமாக உள்ளார். பொங்கலுக்கு இப்படம் வருகிறது. இதை முடித்து விட்டு வெற்றி மாறன் படத்திற்கு வருகிறார்.

இந்தப் படத்தில் எந்த ரீமிக்ஸ் பாட்டு பங்காளி?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil