“பொன்னியின் செல்வன்“ பிரம்மிப்பூட்டும் படப்பிடிப்பு தள புகைப்படம்… எகிறும் எதிர்பார்ப்பு !
சென்னை : பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி பிரம்மிப்பை ஏற்படுத்தி உள்ளது.
வரலாற்று திரைப்படம் என்பதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்து இருந்த நிலையில்,புகைப்படம் வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.
இரண்டு பாகங்களாக வெளியாகி உள்ள இத்திரைப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகி உள்ளது.

வரலாற்றுப்புதினம்
அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றுப் புதினம் பொன்னியின் செல்வன். வரலாற்று புதினத்தை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக இயக்கி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது.

நட்சத்திர பட்டாளம்
இப்படத்தில் சரத்குமார், நாசர், பிரகாஷ் ராஜ்,பார்த்திபன், பிரபு, நிழல்கள் ரவி, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, ரியாஷ் கான், ஜெயராம், ஜெயசித்ரா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, ஷோபிதா துலிபலா, கிஷோர், அஸ்வின், அர்ஜூன் சிதம்பரம், ரஹ்மான், மோகன் ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

கதாபாத்திரம்
பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயரம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ் , வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வைணவ சாமியார் வேடத்தில் ஜெயராம்
ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலியாகவும், ஷோபிதா வானதியாகவும், சரத்குமார் பெரிய பழுவெட்டார் மற்றும் பார்திபன் சின்ன பழுவெட்டார் கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர். சிவனடியார்களை அடியாள் அடிக்கும் வைணவ சாமியார் வேடத்தில் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்க உள்ளார். மேலும் விக்ரம் பிரபு கந்தன் மாறன் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது. இதில், நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு நடித்தார். அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது ஹைதராபாத்தில் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட பிரம்மிப்பூட்டும் புகைப்படங்களை ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்ததும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறி உள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் இசை
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார். கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். மேலும் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











