»   »  நான் கடவுள் ஷூட்டிங்கில் பூஜா

நான் கடவுள் ஷூட்டிங்கில் பூஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

நான் கடவுள் பட நாயகியாகியுள்ள பூஜா, தேனியில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார்.

பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் நான் கடவுள். ஹீரோவை 2 தடவை மாற்றிய பாலா, நாயகியை மட்டும் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கிறார்.

தான் எதிர்பார்க்கும் பிச்சைக்கார முகவெட்டு உள்ள நடிகை கிடைக்கும் வரை நாயகியையை மாற்றிக் கொண்டிருந்த பாலா தற்போது பூஜாவுடன் திருப்திப் பட்டுள்ளார்.

படத்தைப் பொறுத்தவரை ஆர்யா மற்றும் பிறர் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரும்பாலானவற்றை முடித்து விட்டாராம் பாலா. நாயகி சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் இன்னும் இழுபறியாக உள்ளது.

முதலில் பாவனா, பின்னர் மலையாளத்து மீனாட்சி, பிறகு பார்வதி, கார்த்திகா என பலரையும் டெஸ்ட் பார்த்து திருப்தி வராததால், தற்போது பூஜாவில் வந்து நின்றுள்ளார் பாலா.

பூஜாவுக்கு மேக்கப் டெஸ்ட் செய்து பார்த்த பாலாவுக்கு அவர் திருப்திகரமாக இருக்கவே சிங்களத்து சிட்டுக்குருவி, பாலாவின் நாயகியாக ஓ.கே. ஆகியுள்ளார்.

தற்போது தேனியில் நடந்து வரும் படப்பிடிப்புக்கு வந்துள்ளார் பூஜா. ஆனால் தனது கேரக்டர் குறித்து முழுமையாக தெரியாததால் ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

நான் கடவுள் படத்தில் நடிப்பது குறித்து பூஜா கூறுகையில், பாலா சார் படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது. அவரிடம் கதை, எனது கேரக்டர் குறித்து கேட்கவே கூடாது. அவர் குறித்து உலகுக்கே தெரியும் என்றார் பூஜா.

பாலா படமாச்சே, கண்டிப்பாக கதை குறித்தோ, கேரக்டர் குறித்தோ பூஜா கவலையே படத் தேவையில்லை. விக்ரமை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டால் போதுமே!

Read more about: arya bala naan kadavul pooja

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil