»   »  த்ரிஷா ஜகா- இடம் பிடித்த நயன்ஸ்-ப்ரியாமணி

த்ரிஷா ஜகா- இடம் பிடித்த நயன்ஸ்-ப்ரியாமணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலைக்கோட்டை படத்திலிருந்து திரிஷா விலகி விட்டதால் அவருக்குப் பதில் விஷாலின் ஜோடியாக ப்ரியா மணி நடிக்கவுள்ளார்.

பூபதி பாண்டியன் இயக்கத்தில் அடுத்து விஷால் நடிக்கிறார். இப்படத்துக்கு மலைக்கோட்டை என்று பெயர் வைத்துள்ளனர். திரிஷாதான் இதில் விஷாலுக்கு ஜோடியாக நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென திரிஷா விலகிக் கொண்டார்.

ரஜினியின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளால் இப்படத்திலிருந்து திரிஷா விலகிக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், திரிஷாவுக்குப் பதில் இப்போது ப்ரியா மணி ஜோடியாக புக் செய்யப்பட்டுள்ளாராம்.

பருத்தி வீரன் மூலம் லைம் லைட்டுக்கு வந்தவர் ப்ரியா மணி. ஆனால் அதைத் தொடர்ந்து அவர் தமிழில் எந்தப் படத்திலும் புக் ஆகவில்லை. மாறாக தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் மீண்டும் ஒரு தமிழ்ப் பட வாய்ப்பு கிடைத்திருப்பதால் சந்தோஷமாக அதை ஏற்றுள்ளாராம் ப்ரியா.

மேலும் விஷால் ஹீரோ என்பதால் இப்படம் தெலுங்கிலும் டப் ஆகும், அது தனக்கு இரட்டை லாபம் தரும் என்பதும் ப்ரியாவின் கணக்காம்.

அதே போல விஷாலின் இன்னொரு படமான சத்யம் படத்திலும் அவருக்கு த்ரிஷா தான் ஜோடியாக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், ரஜினி படத்துக்காக அதிலிருந்தும் த்ரிஷா ஜகா வாங்கிவிட்டார்.

இதையடுத்து த்ரிஷாவுக்குப் பதில் நயனதாராவை புக் செய்துவிட்டார்களாம்.

த்ரிஷா விலனால் எத்தனை பேருக்கு லாபம்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil