»   »  ப்ரியாமணியின் கோட்டை

ப்ரியாமணியின் கோட்டை

Subscribe to Oneindia Tamil

விஷாலுக்கு ஜோடியாக மலைக்கோட்டை படத்தில் நடித்து வரும் ப்ரியா மணி, இதுவரை இல்லாத அளவுக்கு படு அமர்க்களமாக கவர்ச்சி காட்டி புரட்சி படைத்து வருகிறாராம்.

பாரதிராஜாவால் தமிழ் சினிமாவுக்குக் கூட்டி வரப்பட்ட ப்ரியா மணி ஆரம்பத்தில் சரியான முறையில் எடுபடாமல் தடுமாறி வந்தார். ஆனால் பருத்தி வீரன் வந்து அவருக்கு பெரிய பிரேக் கொடுத்தது.

இதையடுத்து அவரை நடிக்க வைக்க பலரும் முன்வந்தனர். ஆனால் அவர் இரண்டு தெலுங்குப் படங்களை ஒத்துக் கொண்டு ஆந்திரா பக்கம் போய் விட்டார்.

இந்த நிலையில் விஷால், திரிஷா ஜோடியில் உருவாகவிருந்த மலைக்கோட்டை படத்திலிருந்து திடீரென திரிஷா விலகிக் கொண்டார். இதையடுத்து திரிஷாவுக்குப் பதில், ப்ரியா மணியை புக் செய்தனர்.

பூபதி பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் மலைக்கோட்டை படத்தில் படு கவர்ச்சியாக நடிக்கிறாராம் ப்ரியா மணி. இதுவரை எந்தப்படத்திலும் இப்படி நடித்ததில்லை என்று கூறும் அளவுக்கு மலைக்கோட்டையில், கவர்ச்சிக் கோட்டை கட்டியுள்ளாராம் ப்ரியா மணி.

மலைக்கோட்டை குறித்து ப்ரியா மணி கூறுகையில், பருத்தி வீரனுக்குப் பிறகு அதே போன்ற கதையுடன் பலரும் என்னிடம் வந்தனர். ஆனால் ஒரே மாதிரியான ரோலில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை.

என் மீது படிந்து விட்ட முத்தழகு இமேஜை உடைக்க நான் நினைத்தேன். அதனால்தான் முற்றிலும் சிட்டி சப்ஜெக்ட்டான மலைக்கோட்டை வாய்ப்பு வந்தபோது உடனே அதை ஏற்றுக் கொண்டேன்.

இது பக்கா கமர்ஷியல் கதை. கல்லூரி மாணவியாக நான் நடிக்கிறேன். படம் முழுக்க பாவாடை, தாவணியுடன்தான் வருகிறேன். ஆனால் பாடல் காட்சிகளில் முடிந்தவரை கவர்ச்சி காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளேன் என்றார் புன்னகையுடன்.

தெலுங்கில் ப்ரியா மணி நடித்த டாஸ் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. என்.டி.ஆர். ஜூனியருடன் நடித்துள்ள எம்மதொங்கா, தருணுடன் இணைந்து நடித்துள்ள மித்ருடு ஆகிய படங்களும் அடுத்தடுத்து ரிலீஸாகவுள்ளதாம்.

அப்ப, ப்ரியா மணியின் காட்டில் இனி பேய் மழைதான்!

Please Wait while comments are loading...