»   »  மொபைல் ப்ரியங்கா

மொபைல் ப்ரியங்கா

Subscribe to Oneindia Tamil

வெயில் படத்தில் கிராமத்து கேரக்டரில் வந்து கலக்கிய பிரியங்கா அடுத்து நடிக்கும் படம் தொலைபேசி.

தொலைபேசியாலும் மொபைல் போனாலும் பாதிக்கப்படும் ஒரு ஜோடியின் கதையாம்.

அழகிய படங்களைத் தந்த இயக்குனர் பாசிலின் உதவியாளரான பன்னீர் செல்வம் இயக்கும் முதல் படம் இது.

வாழ்க்கையில் எந்தக் குறிக்கோளும் இல்லாம் ஊதாரியாய் சுற்றித் திரியும் ஒரு இளைஞன் திடீரென நல்ல வழிக்குக் திரும்பி, திருந்தி வாழ முயற்சிக்கும்போது ஒரு தொலைபேசி அழைப்பால் ஏற்படும் திருப்பம் தான் கதை என்று சஸ்பெண்ஸ் வைத்துப் பேசுகிறார் பன்னீர்.

இதில் ஹீரோவாக நடிக்கிறார் விக்ரமாதித்யா. தமிழில் ஏற்கனவே தலை காட்டியிருந்தாலும் இன்னும் ஒரு இடம் பிடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பவர் தான் விக்ரமாதித்யா.

இவரையும் பிரியங்காவையும் வைத்து பரபரவென படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கும் பன்னீரிடம் படம் பற்றிக் கேட்டால், என் ஆசான் பாசிலின் படங்களில் ஆழமான கதை இருக்கும். அவரது வழியிலேயே நானும் இதில் நல்ல கதையோடு மெஸேஜும் சொல்லியிருக்கிறேன். அதே நேரத்தில் நகைச்சுவைக்கும் பஞ்சமிருக்காது என்கிறார்.

ப்ரியங்கா தவிர இரு கிளாமர் கட்டைகளையும் படத்தில் அறிமுகப்படுத்துகிறாராம். வழக்கமாக ஹீரோ தான் சீனுக்கு சீன், பாட்டுக்கு பாட்டு கெட்-அப்பை மாற்றுவார். ஆனால், இதில் ஹீரோவின் அப்பாவாக வரும் நிழல்கள் ரவிக்குத் தான் ஏகப்பட்ட கெட்-அப்களாம். மிக வித்தியாசமான ரவியை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.

படத்தில் கருணாஸ் இருந்தாலும் நிழல்கள் ரவியின் கேமாளித்தனங்களால் ரசிகர்கள் வயிறு வலிக்கப் போவது நிச்சயம் என்கிறார் பன்னீர்.

படப்பிடிப்பு கிட்டத்தட்ட 70 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில் இப்போது ஊட்டி, மூணாறு, புதுச்சேரி என யூனிட் ஓடியாடிக் கொண்டிருக்கிறது. புதிய இசையமைப்பாளராக சாந்த குமார் என்பவர் அறிமுகமாகிறார்.

புளு வாட்டர் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் இதை தயாரிக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil