»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil
  • தயாரிப்பாளர் ஜீ.வி. (மணிரத்னத்தின் அண்ணன்) நீண்ட இடைவேளைக்குப் பிறகு தயாரிக்கவுள்ள படத்தில் ஹீரோவாக விஜய் நடிப்பது தெரியும். அவருக்கு ஜோடி யார் தெரியுமா? உலக அழகி பிரியங்கா சோப்ராவாம். ஒரே குஷியாக இருக்கிறாராம் இளைய தளபதி.
  • ஜூனியர்-சீனியர் என்ற படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அத்தோடு ஒரு பாடலைப் பாடுவது போல ஒரு காட்சியிலும் படத்தில் தோன்றவுள்ளாராம்.
  • பூவெல்லாம் உன் வாசம் நன்றாகப் போவதால் அஜீத் சந்தோஷமாக இருக்கிறாராம். இப்போது தயாராகிக் கொண்டிருக்கும் ரெட் படத்தை அதிரடி ஹிட்டாக்க தீவிரமாக உழைத்து வருகிறார்.
  • காதலே சுவாசம் படத்தின் முழுப் படப்பிடிப்பும் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. தமிழ் படம் ஒன்றின் முழுப் படப்பிடிப்பும் இதுவரை வெளிநாட்டில் படமானதில்லை. அதிலும் தென் ஆப்பிரிக்காவில் தயாராகும் முதல் தமிழ் படம் இதுதான் என்று கூறுகிறார் படத்தின் தயாரிப்பாளர் குட்டி பத்மினி. கார்த்திக், மீனாதான் படத்தில் ஜோடி. குட்டியின் மகள் கீர்த்தனாவும் படத்தில் இருக்கிறார்.
  • அருண்பாண்டியன் (ஞாபகம் இருக்கா.. ஆபாவாணன் படங்களில் வந்து நடிக்கச் சொன்னால், சும்மா நின்றிருப்பாரே) நடித்தது போதும் என்று படத்தை இயக்க வருகிறார். அவரே சொந்தமாக தயாரித்து இயக்கவுள்ள படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க விஜயகாந்த்தும், கார்த்திக்கும் தலையாட்டிருக்கிறார்களாம். விரைவில் ஷூட்டிங் ஸ்டார்ட்டிங்.
  • சாக்லேட் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியிருப்பதால் இன்னொரு பாட்டையும் சேர்க்கத் திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர். இதற்கான படப்பிடிப்பும் நடந்து கொண்டிருக்கிறது. பிரசாந்த்தும், ஜெயா ரேயும் இதில் ஆடியிருக்கிறார்கள். ஓவர் ஆட்டம் வேண்டாம்பா!
  • சிட்டிசன் தட்டுத்தடுமாறி ஓடியதால் வருத்தத்தில் இருந்த டைரக்டர் ஷரவணன் சுப்பையா இப்போது சந்தோஷமாகியிருக்கிறாராம். அஜீத்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தால் அவருக்கு சந்தோஷம் வராதா என்ன. அஜீத்தின் ரெட் முடிந்தவுடன் இந்தப் படம் ஆரம்பிக்குமாம்.
  • வேப்பிலையம்மன் (டைரக்டர் ராமநாராயணனே தான்) படத்தில் அசத்தலானா கேரக்டரில் வருகிறாராம் கரண். இந்தப் படம் தனக்கு ஒரு திருப்புமுனையைத் தரும் என்று பலமாக நம்புகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!. ஓவர் ஆக்டிங்கைக் குறைத்தாலே போதுமே.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil