»   »  என்னது ஷூட்டிங்கை நிறுத்திட்டோமா... நெவர்! - தயாரிப்பாளர் சங்கம்

என்னது ஷூட்டிங்கை நிறுத்திட்டோமா... நெவர்! - தயாரிப்பாளர் சங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: படப்பிடிப்புகளை நிறுத்திவிட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:

Producers council denies cancellation of shootings

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்படுவதாகவும், அது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது என்றும் செய்திகள் பரவியுள்ளன. ஆனால் இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் எந்த விதமான படப்பிடிப்புகளுக்கும் தடை விதிக்கப்படவில்லை.

ஆகையால் இந்த வதந்தியை யாரும் நம்பவேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். படப்பிடிப்புகள் எல்லாம் சுமுகமாக நடைபெறுகின்றன.

-இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamil film producers council denied reports on cancellation of all shootings.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil