»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்துக்குப் பின் முழுக்க முழுக்க கடலையே சார்ந்து உருவாகியுள்ளபடம் இயற்கை. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

நடிகர் பிரபுவின் உறவினரான வி.ஆர் குமார் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஷாம், அருண்குமார், கன்னடத்தில்இருந்து தமிழுக்கு வந்த குட்டி ராதிகா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் மிக வித்தியாசமாகவும்அருமையாகவும் வந்துள்ளதாக சொல்கிறார்கள்.

இரு கப்பல் கேப்டன்கள். கரையோரத்தில் ஹோட்டல் நடத்தும் அழகிய ஆங்கிலோ இந்தியப் பெண் ஆகியோரைச்சுற்றி நடக்கும் காதல் கதை இது.

தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலில் வரும் கேப்டன் அருண்குமார், கடலோரத்தில் ஹோட்டல் நடத்தும்ராதிகாவுடன் காதல் கொள்கிறார்.

திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். கப்பலில் இன்னொரு நாட்டுக்குச்சென்றுவிட்டுத் திரும்பிவிடுவதாகச் சொல்லி செல்கிறார். கண்ணீருடன் அவரை வழியனுப்பி வைக்கும் ராதிகாகாத்திருக்கிறார்.அந்தக் காத்திருப்பு தொடர் கதையாகிவிடுகிறது. வருடக்கணக்கில் காத்திருந்தும் அருண் வராமல் போக காதலில்வாடும் ராதிகா, கடலில் தினமும் தன் கண்ணீரையும் கரைக்கிறார்.

அப்போது வரும் இன்னொரு சரக்குக் கப்பலின் கேப்டன் ஷாமுக்கு ராதிகாவைப் பிடித்துப் போக, அந்தக் காதலைமறுக்கிறார் ராதிகா.

இப்படி சிக்கல் விழுந்த காதல் கதையை அந்தமானிலும் பல அழகிய கடற்கரைகளிலும் படம் பிடித்திருக்கிறார்கள்.கிட்டத்தட்ட படம் முழுவதுமே கடல், கடல் சார்ந்த பகுதிகளில் தான் எடுக்கப்பட்டுள்ளன.

அந்தமான் கடலோரத்தில் மிகப் பெரிய லைட் ஹவுஸ் செட்டைப் போட்டிருக்கிறார் கலை இயக்குனர் டிரஸ்ட்கிமருது. இது கிட்டத்தட்ட ரூ. 40 லட்சத்தை விழுங்கிவிட்டதாம். தூத்துக்குடியின் பழைய துறைமுகத்திலும் சூட்டிங்நடத்தியிருக்கிறார்கள்.கதையோடு கேமராவும் வித்தியாசமாய் விளையாட படம் சூப்பராக வந்திருக்கிறதாம்.

பண்டிட் குயீன் படத்தில் புலான் தேவியாக நடித்த சீமா பிஸ்வாஸ் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். செயின்ஸ்மோக்கிங் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக நடிக்கும் அவர் தான் கடலோர ஹோட்டலை நடத்துகிறார். அதில்அவரது உறவுப் பெண் ராதிகா பணியாற்றுகிறார். அப்போது தான் அருண்குமார், ஷாம் என இளைஞர்களின்அன்புக்கு பாத்திரமாகிறார் ராதிகா.

படத்தை இயக்கியிருப்பது எஸ்.பி. ஜனநாதன். லெனின் இயக்கிய ஊருக்கு நூறு பேர் என்ற தேசிய விருது பெற்றபடத்தின் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்.

இசை வித்யாசாகர். நல்ல கதைத் தளம் கிடைத்தால் அசத்திவிடும் வைரமுத்து தான் பாடல்கள் எழுதியுள்ளார் .கடல், காதல், கண்ணீர் என ஒரு யுவதியின் வாழ்க்கை, அவளது போராட்டத்தை தனது பாடல்களில் உணர்ச்சிக்குவியலாய் கொட்டியிருக்கிறார் கவியரசர்.

குட்டி ராதிகா தன் கவர்ச்சியாலும் நடிப்பாலும் அசத்தியிருக்கிறாராம்.

பாலாவின் பிதாமகன், அஜீத்தின் ஆஞ்சநேயா, விஜய்யின் திருமலை என்ற படு எதிர்பார்ப்பு படங்களுக்குஇடையே இயற்கை இடையில் புகுந்து வெற்றிக் கொடி நாட்டினாலும் ஆச்சரியமில்லையாம். படம் அவ்வளவுசூப்பராய் வந்துள்ளது என்கிறார்கள்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil