»   »  பரத்துடன் ரகஸ்யா போட்ட குத்தாட்டம்!

பரத்துடன் ரகஸ்யா போட்ட குத்தாட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

"பிப்ரவரி 14 படத்திற்காக சமீபத்தில் ரகஸ்யாவும், பரத்தும் ஒரு சூப்பர் குத்தாட்டப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளனர்.

பரத், ரேணுகா மேனன் ஜோடியாக நடிக்க உருவாகி வரும் படம் "பிப்ரவரி 14. இப்படத்தின் படப்பிடிப்பு படு விறுவிறுப்பாகநடந்து வருகிறது.

சமீபத்தில் ஒரு குத்துப் பாட்டை சுட்டுத் தள்ளினார்கள். பரத்தும், ரகஸ்யாவும் ஆடிய இந்தப் பாட்டு ஷூட்டிங் ஸ்பாட்டையே படுசூடாக்கி விட்டதாம்.

கேரளாவின் சாலக்குடி உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் பல இடங்களில் 10 நாட்களாக இந்தப் பாட்டைபடமாக்கியுள்ளார்களாம்.

"ஒத்தையா ரெட்டையா என்று தொடங்கும் இந்தப் பாடலுக்கு தினேஷ் நடனம் அமைத்துள்ளார். பரத்தும், ரகஸ்யாவும் ஜோடிபோட்டுத் தாக்கியுள்ளார்கள்.

படு கிளுகிளுப்பாக எடுக்கப்ட்டுள்ள இந்தப் பாடலை அனுராதா ஸ்ரீராம், புஷ்பவனம் குப்புசாமி இருவரும் பாடியுள்ளார்கள்.

"சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா பாட்டுக்குப் பிறகு, ரகஸ்யா இந்தப் பாட்டுக்கு படு சூப்பராக ஆடியுள்ளாராம். சீனா தானா போலரகஸ்யாவுக்கு இதுவும் பெரும் பெயரை வாங்கித் தருமாம்.

பரத்தின் இடுப்பில் கால் வைத்து துகில் ஏறுவது போல பல சாகஸ நிகழ்ச்சிகளையும் செய்து கலக்கியுள்ளாராம் ரகஸ்யா.

கோடை வெயிலுக்கேத்த குளிர்ச்சியான பாட்டுத்தான்!


Read more about: barath dance february 14 ragasya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil