»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழ் சினிமா காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளது. ரோஜாவுக்கு அடுத்தபடியாககாஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ள படம் ரகசியமாய் தானாம்.


இதில் நடிக்கும் நீலம் மும்பை வரவு தான். ஏற்கனவே மாடலிங் உலகில் பிரசித்தமானவர். இவரை தமிழுக்கு கூட்டிவந்திருப்பது இயக்குனர் அமுதன். இவர் தங்கர்பச்சானிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.

எப்படிச் சொன்னாலும் அப்படியே நடிக்கிறாராம் நீலம். நடிப்பு என்று சூட்டிங் ஸ்பாட்காரர்கள் சொல்வதுகவர்ச்சியைத் தான். எப்படியும் நடிக்கத் தயார் என்று எழுதியே தந்துவிடக் கூட தயாராக இருக்கிறாராம். சொல்லிச்சொல்லி மாய்ந்து கொண்டிருக்கிறார்கள் ரகசியமாய் யூனிட்காரர்கள்.

ஒரு பாடல் காட்சியின்போது ஹீரோ பிரசன்னாவின் கன்னத்தில் கடிக்க வேண்டிய காட்சியில் உண்மையிலேயேபிரசன்னாவின் கன்னத்தை கடித்து எடுத்துவிட்டாராம். பிரசன்னா ஆ வென அலறிய பிறகு தான் கன்னத்தைதனது பற்களில் இருந்து ரிலீஸ் செய்தாராம். (குடுத்து வச்ச ஹீரோ!!)

காஷ்மீர் மட்டுமின்றி குஜராத்திலும் ஒரு பாடல் காட்சியை சுட்டிருக்கிறார்கள். தேவையில்லை.. தேவையில்லை..எதுவுமே தேவையில்லை என்று போகிறதாம் அந்தப் பாட்டு.

காஷ்மீரில் படப் பிடிப்புக்கு மாநில போலீசாருடன் சேர்ந்து ராணுவத்தினரும் பாதுகாப்பு தந்தார்களாம். அதேபோல குஜராத்திலும் போலீசார் பாதுகாப்பு கேட்காமலேயே கிடைத்ததாம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil