»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

நடிக்கத் தயாராகிறார் ராஜூ சுந்தரம்.

டான்ஸ் பிரியர்கள் மத்தியில் பாப்புலர் நபர் ராஜு சுந்தரம். இப்போது வெளியாகும் முக்கால்வாசிப் படங்களுக்கு நடனம் அமைப்பவர் ராஜு சுந்தரம். சிலபாடல்களில் அவரும் "கால் காட்டுவார்.

காலாதிபதி பிரபு தேவாவின் அண்ணன். 2 வருடத்திற்கு முன் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் தம்பியாகநடித்தவர். பிறகு பல பாடல்களில் நட்சத்திர நாயகிகளுடன் ஜோடியாக ஆடி அசத்தியவர். காதல் கவிதையில் ரோஜாவுடன் ஆடிய "ஆளான நாள் முதலா,பெண்ணின் மனதைத் தொட்டு படத்தில் "நான் சால்ட்டு கொட்டா பாட்டில் தம்பி பிரபு தேவாவுடன் ஆடிக் கலக்கியவர்.

டான்ஸில் கலக்கிய ராஜூ சுந்தரம் தற்போது நடிப்புப் பக்கம் தலைகாட்டத் தீர்மானித்திருக்கிறார். ஜீன்ஸுக்குப் பிறகு பாடல்களோடு தனது பங்கைநிறுத்திக் கொண்ட ராஜு சுந்தரம் இப்போது முழுமையான நடிகனாக அவதாரம் எடுக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி கலையரசன் இயக்கவுள்ள பூவே பூவே திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ராஜூ சுந்தரம். இப்படத்தில்காதலர் தினம் படத்தில் நடித்த குணாலும் நடிக்கிறார். நடிகை சாக்ஷி. ராஜ்பிரீத் படத்தை தயாரிக்கிறார்.

நல்ல டான்ஸர் என்று பெயர் எடுத்துள்ள ராஜு சுந்தரம், நல்ல ஹீரோ என்ற பெயரையும் எடுப்பாரா என்பது பூவே பூவே வெளிவந்த பிறகுதான்தெரியும்.

Read more about: act, dance, movie, raju sundaram
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil