»   »  கமலை ரசித்த ரஜினி

கமலை ரசித்த ரஜினி

Subscribe to Oneindia Tamil

தசாவதாரம் பட ஷூட்டிங்குக்கு திடீர் என வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, கமலின் 10 அவதாரங்களையும் பார்த்து வியந்து போய், உங்களுக்கு நிகர் நீங்கள்தான் என்று கூறி வாயாரப் பாராட்டினார்.

சூப்பர் ஸ்டார் என்ற பெரிய பட்டம் தலைக்கு மேல் பல காலமாக தொங்கிக் கொண்டிருந்த போதிலும் அதன் கனம் தலைக்குள் போய் விடாமல் படு எளிமையாக இருப்பவர் ரஜினி.

திறமையாளர்களை வாய் விட்டுப் பாராட்டுவது, எளிமையாக பழகுவது என பல நல்ல பழக்கங்கள் ரஜினியிடம் இருப்பதால்தான், இன்னும் அவர் திரையுலகின் முடி சூடா மன்னராக இருக்கிறார்.

தனது தாராள மனப்பான்மையை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் ரஜினி. சிவாஜி படத்தின் ஓரிரு பேட்ச் அப் காட்சிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. ஏவி.எம். ஸ்டுடியோவில் இந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

அப்போதுதான் கமல்ஹாசன் இன்னொரு தளத்தில் தசாவதாரம் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருப்பது ரஜினிக்குத் தெரிய வந்தது. இதையடுத்து கிடைத்த ஒரு கேப்பில் கபால் என தசாவதாரம் ஸ்பாட்டுக்கு ஜூட் விட்டார் ரஜினி.

ரஜினியைப் பார்த்ததும் தசாவதாரம் யூனிட் ஆச்சரியத்தில் மூழ்கியது. கமலை நெருங்கிய அவர் படப்பிடிப்பு குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக கமல் போட்டுள்ள 10 ேவடங்கள் குறித்தும் ஆர்வமாக விசாரித்தார்.

தான் போட்டுள்ள சில கெட்டப்களை கமல், ரஜினிக்குப் போட்டுக் காட்டினார். அதைப் பார்த்த ரஜினி ஆச்சரியமாகிப் போய் விட்டாராம். அதிலும் நீக்ரோ வேடத்தில் கமலைப் பார்த்த அவருக்கு சுத்தமாக அடையாளமே தெரியவில்லையாம். கமல், இது நான்தான் என்று விளக்கிய பிறகே அவருக்கு அது கமல் என்று தெரிந்ததாம்.

கமல்ஹாசன் போட்டுள்ள 10 அவதாரங்களையும் பிரத்யேகமாக பார்த்த ரஜினி, அசந்து போய் விட்டாராம். கமலின் கைகளைப் பிடித்து உங்களுக்கு நிகர் நீங்கள்தான். பக்கத்தில் கூட யாரும் வர முடியாது என்று பிரமித்துப் பாராட்டினாராம்.

கமல், ரஜினி ஆகிய இரு டைட்டான்களின் இந்த சந்திப்பு அரை மணி நேரம் நீடித்ததாம். கோலிவுட்டின் இரு இமயங்களின் சந்திப்பு குறித்த தகவல் பரவியதும் பத்திரிக்கைக்காரர்கள் குவிந்து விட்டனர். அதற்குள் ரஜினி அங்கிருந்து சிவாஜிக்கு ஜூட் விட்டு விட்டார்.

பின்னர் கமல் தன்னைச் சந்தித்த பத்திரிக்கையாளர்களிடம் இதுகுறித்துப் பேசுகையில், 1970லிருந்தே இருவரும் நண்பர்கள். எனவே அவர் எனது ஷூட்டிங்கைப் பார்க்க வந்ததும், நான் அவரது ஷூட்டிங்கைப் பார்க்கப் போவதும் புதிதல்ல, ஆச்சரியமும் இல்லை.

அவரும் கூட 10 வேடங்களில் நடிக்க முடியும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்தான் ரஜினி. சிவாஜி படத்தில் கூட அவர் பல கெட்டப்களில் வருவதாக அறிந்தேன் என்றார் கமல்.

சக ஹீரோக்களை விமர்சித்து வசனம் வைத்துப் பிழைப்பை ஓட்டி வரும் இன்றைய இளம் ஹீேராக்கள் இவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil