»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

"பாபா" படப்பிடிப்பிற்காக சுவிட்சர்லாந்துக்கு ரஜினிகாந்த் புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது.

"பாபா" படத்தின் சில முக்கியமான காட்சிகளை தொடர்ந்து 7 நாட்கள் சுவிட்சர்லாந்தில் படமாக்குவதற்குத்திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தக் காட்சிகளில் நடிப்பதற்காக துணை நடிகர்-நடிகைகள் மற்றும் டெக்னீசியன்கள் இரு நாட்களுக்கு முன்பேசுவிஸ் சென்றுவிட்டனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த் நேற்று (மே 12) காலை 8 மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டன்சென்று, அங்கிருந்து சுவிட்சர்லாந்து செல்லத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் விமானம் புறப்பட்டபோது, அந்த விமானத்தின் ஒரு என்ஜினில் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானிகண்டுபிடித்தார். இதையடுத்து ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைத்து 298 பயணிகளும் விமானத்தைவிட்டு இறக்கிவிடப்பட்டனர்.

பகல் 12 மணி வரை என்ஜின் சரி செய்யப்படாததால், அவ்விமானம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வீடுதிரும்பிய ரஜினிகாந்த், மாலை 6 மணிக்கு வேறொரு விமானம் மூலம் லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

கைலியுடன் விழாவுக்குச் சென்ற ரஜினி:

ரஜினி குறித்து இன்னொரு பரபரப்பு செய்தியும் உண்டு. சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு விருது வழங்கும்விழாவுக்குச் சென்றார் ரஜினி. விழா மேடைக்கு அவர் வந்தபோது அனைவருக்கும் பெரும் ஆச்சரியம். காரணம்அவரது காஸ்ட்யூம். வெறும் கைலியையும் சாதாரண சட்டையையும் அணிந்து கொண்டு அவர் மேடை ஏறரசிகர்கள் பெரும் ஆரவாரம் செய்தனர்.

மஹாராஷ்டிர அரசின் 39வது சினிமா விருது வழங்கும் விழா சமீபத்தில் மும்பையில் நடந்தது.

சிவாஜி ராவ் என்ற இயற்பெயரைக் கொண்ட ரஜினிக்கு பூர்வீகம் மஹாராஷ்டிரா தான். இவரது தாய் மொழிமராட்டி. ஆனால், குடும்பம் பெங்களூரில் செட்டில் ஆனதால் கன்னடத்தின் மீது மிகுந்த பாசம் உண்டு.

அதன் பின்னர் விழாவில் பேசிய ரஜினிகாந்த், மராட்டிய மொழியிலேயே பேசி தன் மாநில ரசிகர்களைக்கவர்ந்தார்.

அரசியலுக்கு ரஜினி வரமாட்டார் - எஸ்.வி. சேகர்:

இதற்கிடையே ரஜினிகாந்த் எந்தக் காரணத்தைக் கொண்டும் அரசியலுக்கு வரவே மாட்டார் என்று நகைச்சுவைநடிகரும் பா.ஜ.க. அனுதாபியுமான எஸ்.வி. சேகர் கூறினார்.

தன்னுடைய "பெரிய தம்பி" நாடகத்தில் நடிப்பதற்காக சேலம் வந்திருந்த சேகர் நிருபர்களிடம் கூறுகையில்,

தமிழகத்தில் நல்ல அரசியல் நிலை வரவேண்டும் என்று ரஜினிகாந்த் நினைக்கிறார்.

ஆனால் எந்த ஜோதிடர் கூறினாலும் சரி, ரஜினிகாந்த் அரசியல் பக்கமே வர மாட்டார் என்று நான் ஆணித்தரமாகஅடித்துக் கூறுகிறேன்.

அதேபோல், ரஜினியின் "பாபா" திரைப்படத்தாலும் தமிழகத்தில் எந்தவிதமான அரசியல் மாறுதலோ சமுதாயமாற்றமோ ஏற்படப் போவதில்லை என்றார் சேகர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil