»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும், சிலம்பரசனும் இணைந்து டூயட் பாடினர்.

விசில் என்ற படத்துக்காக இந்தப் பாடலை அவர்கள் பாடினர். இப் படத்தில் ஆதித்யா என்ற கதாநாயகன் அறிமுகமாகிறார்.கதாயநாகியாக காயத்ரி ரகுராம் நடிக்க உள்ளார்.

இப் படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவான ஒரு பாடலைத் தான் ஐஸ்வர்யாவும் சிலம்பரசனும்பாடியுள்ளனர். இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக செய்திகள் வரும் நிலையில் இந்த டூயட்டுக்காக ஒன்று சேர்ந்துள்ளனர்.

உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி-ஜெர்ரி இயக்கும் இந்த படத்தின் பாடல் பதிவு பிரீத்தி ஸ்டுடியோவில் நடந்தது. கல்லூரிப் படிப்பைமுடித்துவிட்டு ஹீரோவும் ஹீரோயினும் பிரிகிற மாதிரியான காட்சிக்கு எழுதப்பட்ட பாடல் இது. கவிஞர் பழனிபாரதியின் இந்தப் பாடல்,

நட்பே.. நட்பே.. இனி எங்கே சந்திப்போம் என்று ஆரம்பித்து

இன்று அழகான கனவொன்று கலைகிறதே..

சின்னச் சின்ன சண்டைகள் போட்டோம்..

இன்று அந்தக் காயம் எல்லாம் சுகமாக வலிக்கின்றதே..

காம்பவுண்ட் சுவரே பை.. பை..

கெமிஸ்ட்ரி லேபே பை.. பை..

கல்லூரி மரங்களே பை.. பை..

போய் வந்த சாலைகளே பை.. பை..

என்று மிக அட்டகாசமாகப் போகிறது அந்த பாடல். பாடலைக் கேட்பவர் கண்களில் ஒரு நிமிடமாவது அவர்களது கல்லூரி இறுதி நாள்தோன்றி மறைவது நிச்சயம் என்கிறார் இமான்.

ஐஸ்வர்யாவின் குரலுக்கு இணையாக சிலம்பரசனும் நன்றாகவே பாடியிருக்கிறாராம்.

ஏற்கனவே லதா ரஜினிகாந்த் தயாரித்த சில ஆல்பங்களில் ஐஸ்வர்யா பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விசில் படத்தை மீடியா டிரீம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil