»   »  2.0 படப்பிடிப்பில் விபத்து... ரஜினி காலில் காயம்!

2.0 படப்பிடிப்பில் விபத்து... ரஜினி காலில் காயம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2.O படத்தின் படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு இப்போது அவர் நலமாக உள்ளார்.

2.O (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Rajini injured at 2.O shooting

ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுத, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற 2.0 படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டது. ரஜினிக்குக் காலில் காயம் பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்குப் பிறகு ரஜினி வீடு திரும்பினார்.

தற்போது அவர் நலமுடன் உள்ளதாக ரஜினி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

English summary
Superstar Rajinikanth was injured at the shooting of 2.O movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil