»   »  ஆகஸ்ட் இறுதியில் 2.ஓ படப்பிடிப்பில் பங்கேற்கிறார் ரஜினி!

ஆகஸ்ட் இறுதியில் 2.ஓ படப்பிடிப்பில் பங்கேற்கிறார் ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆகஸ்ட் கடைசி வாரத்தில் ஷங்கர் இயக்கி வரும் 2.ஓ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் கலைப்புலி தாணு தயாரித்த கபாலி படம் சமீபத்தில் வெளியாகி பெரும் சாதனைப் படைத்துள்ளது.

Rajini to join 2.O shoot in August end

இந்தப் படம் வெளியாகும் போது ரஜினி அமெரிக்காவில் இருந்தார். படத்துக்கு எந்த விழா, பிரஸ் மீட்டும் வைக்காமலேயே வெளியிடப்பட்டது. ப்ளாக்பஸ்டர் படமாக மாறி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ரஜினி நடித்து வந்த இன்னொரு படமான 2.ஓ படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்துள்ளது.

கடந்த மே மாதம் அமெரிக்கா போன ரஜினி, உடல் நலப் பரிசோதனைகள் முடிந்து ஓய்விலிருந்தார். கபாலி வெளியாகி இரு தினங்களுக்குப் பிறகே இந்தியா திரும்பினார்.

இப்போது ஓய்விலிருந்தாலும், 2.ஓ படம் தொடர்பான தகவல்களைக் கேட்டறிந்து வருகிறார். ஆகஸ்ட் கடைசி வாரத்தில் அவர் 2.ஓ படப்பிடிப்பில் மீண்டும் பங்கேற்பார் எனத் தெரிகிறது.

இப்போது ரஜினி இல்லாத காட்சிகளை மட்டும் இயக்குநர் ஷங்கர் படமாக்கி வருகிறார். சுதன்ஷு பாண்டே, அடில் ஹூஸைன் தொடர்பான காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி படப்பிடிப்புக்கு வந்ததும்,
அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன் தொடர்பான காட்சிகள் படமாகும் எனத் தெரிகிறது.

English summary
Rajinikanth will participate Shankar directed magnum opus 2.O in the last week of August

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil