»   »  ரஜினி பட ஷூட்டிங்கால் கொலவெறியில் சாலிகிராமம் மக்கள்

ரஜினி பட ஷூட்டிங்கால் கொலவெறியில் சாலிகிராமம் மக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்தின் 2.0 படப்பிடிப்பால் சென்னை சாலிகிராமம் மக்கள் கோபத்தில் உள்ளார்கள்.

Select City
Buy Aithe 2.0 (A) Tickets

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் 2.0. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் வைத்து ஆக்ஷன் காட்சியை படமாக்கியுள்ளனர்.


குண்டுவெடிப்பு காட்சி

குண்டுவெடிப்பு காட்சி

சாலிகிராமத்தில் வைத்து கார் குண்டுவெடிப்பு காட்சி படமாக்கப்பட்டுள்ளது. கார் குண்டுவெடிப்பு காட்சியை மிகவும் தத்ரூபமாக படமாக்கியுள்ளனர். அந்த காட்சியில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் பயங்கர சப்தத்துடன் வெடித்துள்ளது.


காது கிழியுது

காது கிழியுது

வெடிபொருட்கள் பயங்கர சப்தத்துடன் வெடித்ததால் ஏற்பட்ட காற்று மற்றும் ஒலி மாசை படக்குழுவாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லையாம். இந்நிலையில் வெடி சப்தம் கேட்டு மக்கள் அச்சமும், கோபமும் அடைந்துள்ளனர். அந்த பகுதியே புகை மண்டலமாக இருந்துள்ளது.


ரஜினி

ரஜினி

கார் வெடிக்கும் காட்சியை படமாக்கியபோது அங்கு ரஜினியோ, வில்லன் அக்ஷய் குமாரோ இல்லை. ஷங்கர், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மற்றும் ஸ்டண்ட் நடிகர்கள் மட்டும் தான் இருந்துள்ளனர். சாலிகிராமத்தில் ஒரு வாரம் படப்பிடிப்பு நடந்துள்ளது.


ஷங்கர் ஹேப்பி

ஷங்கர் ஹேப்பி

கார் வெடிக்கும் காட்சியால் சாலிகிராமம் மக்கள் கோபத்தில் இருந்தாலும் அது மிகவும் அருமையாக வந்துள்ளதால் ஷங்கர் மகிழ்ச்சியில் உள்ளாராம். அந்த காட்சியை மிகவும் பிரமாண்டமாக படமாக்கியுள்ளார்கள்.


English summary
According to reports, people of Saligramam were not happy with Rajinikanth's 2.0 shooting after they shot a car explosion scene there.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil