»   »  மருமகனை வைத்து மகள் இயக்கும் விஐபி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியின் திடீர் விசிட்!

மருமகனை வைத்து மகள் இயக்கும் விஐபி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியின் திடீர் விசிட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனது மூத்த மருமகன் தனுஷ் நடிக்க, இளைய மகள் சௌந்தர்யா ரஜினி இயக்கும் விஐபி 2 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட்டடித்தார் ரஜினி.

2.0 படப்பிடிப்பு, ஈழத் தமிழர் பிரச்சினை, ஓயாத அரசியல் சர்ச்சைகள், விஐபிகள் சந்திப்பு, நடிகர் சங்க கட்டட விவகாரம், ரசிகர்கள் சந்திப்பு என படு பிஸியாக இருக்கிறார் ரஜினிகாந்த்.


Rajini visits Dhanush's VIP 2 sets

இன்னும் சில தினங்களில் பா ரஞ்சித் இயக்கும் அவரது புதுப் படமும் தொடங்கவிருக்கிறது. அதன் பிறகு வெளி நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ள முடியாது என்பதாலோ என்னமோ, முடிந்த வரை நண்பர்கள், தெரிந்தவர்கள் நிகழ்ச்சிகள் அனைத்திலுமே பங்கேற்று வருகிறார். இடையிடையே தனது வீட்டிலேயே வைத்து சில படங்களின் ஆடியோ வெளியீட்டையும் செய்து வைக்கிறார்.


Rajini visits Dhanush's VIP 2 sets

இந்த நிலையில், இன்று காலை தனது மூத்த மருமகன் தனுஷ் நடிக்கும் விஐபி 2 ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீரென வந்தார் ரஜினி. அவரை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வரவேற்றார். படப்பிடிப்பை சிறிது நேரம் பார்வையிட்ட ரஜினி, படத்தின் நாயகன் தனுஷ் மற்றும் இயக்கநர் சௌந்தர்யா ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.


Rajini visits Dhanush's VIP 2 sets
English summary
Superstar Rajinikanth was paid a sudden visit to Dhanush - Soundarya project VIP 2 today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil