»   »  நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு 2.ஓ படப்பிடிப்பில் ரஜினிகாந்த்!

நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு 2.ஓ படப்பிடிப்பில் ரஜினிகாந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 2.ஓ படப்பிடிப்பில் பங்கேற்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ஷங்கர் இயக்கி வரும் 2.ஓ படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு கடந்த மே மாதம் முடிந்தது. அதன்பிறகு ஓய்வுக்காக அமெரிக்கா சென்றார் ரஜினி. சில மருத்துவ சோதனைகளையும் முடித்துக் கொண்டு சென்னை திரும்பியவர், கடந்த இரு மாதங்களாக வீட்டிலயே ஓய்வெடுத்து வந்தார்.


Rajinikanth resumes 2.O shoot

செப்டம்பர் இறுதி வாரத்தில் அவர் மீண்டும் 2.ஓ படப்பிடிப்பில் பங்கேற்பார் என லைகா நிறுவனம் கூறியிருந்தது.


Rajinikanth resumes 2.O shoot

அதற்கேற்ப இன்று முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ரஜினி. திருக்கழுக்குன்றத்தில் நடந்த படப்பிடிப்புக்கு அவர் வந்தபோது, அவரைப் பார்க்க ஏராளமான மக்கள் திரண்டு நின்றனர்.


காரின் மேற்பகுதியைத் திறந்து நின்றபடி மக்களைப் பார்த்து கையசைத்தபடி அவர்களின் வரவேற்பையும் ஆரவாரத்தையும் ஏற்றார் ரஜினி.

English summary
After 4 months rest, Rajinikanth has returned 2. O shooting.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil