»   »  குத்து வசந்தம்-சுஜா-ஸ்வேதா!

குத்து வசந்தம்-சுஜா-ஸ்வேதா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இசை வசந்தம் என்று பெயரெடுத்த இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார், குத்துப் பாட்டுக்கு கும்மாங்குத்து ஆட்டம் போட்டு குத்து வசந்தம் ஆகியுள்ளார்.

வித்தியாசமான இசை மூலம் இசை ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் எஸ்.ஏ.ராஜ்குமார். அவரது பாடல்கள் பல இன்றளவும் ரசிகர்களின் மனங்களில் ரம்யமாக சுழன்று கொண்டுள்ளன.

தமிழில் வதவதவென பல இசையமைப்பாளர்கள் உருவாகியதால் தமிழில் அதிக படங்கள் இல்லாத நிலை ராஜ்குமாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து கன்னடம், தெலுங்கு பக்கம் கவனத்தைத் திருப்பினார் ராஜ்குமார்.

இந் நிலையில் மீண்டும் தமிழுக்குத் திரும்பியுள்ள ராஜ்குமார், வள்ளுவன் வாசுகி என்ற படத்திற்கு இசையமைக்கிறார். மீண்டும் தனது பாடல்கள் தமிழ் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இந்தப் படத்தின் பாடல்கள் இருக்கும் என்று கூறியுள்ளார் ராஜ்குமார்.

இப்படத்தில் இசையமைப்போடு ஒரு குத்துப் பாட்டுக்கும் ஆடியுள்ளாராம் ராஜ்குமார். அவருடன் கூட சேர்ந்து ஆடியுள்ளது, குத்துச் சூறாவளி சுஜா.

என்னடி முனியம்மா ரீமிக்ஸ் போட்டுக்கு சுஜா போட்ட ஆட்டம் ரசிகர்களின் கண்களிலிருந்து இன்னும் நழுவவில்லை. ஆனால் வள்ளுவன் வாசுகியில் சுஜா ஆடியுள்ள குத்துப் பாட்டு முனியம்மாவை பீட் செய்து விடுமாம்.

அட்டகாசமான பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாட்டைக் கேட்ட ராஜ்குமார், தானே இதில் ஆடி நடிக்க விரும்பினாராம். பாட்டும், குத்தாட்டமும் படு அம்சமாக வந்திருக்கிறதாம்.

படத்தின் நாயகி ஸ்வேதாவே போதும் போதும் என்று கூறும் அளவுக்கு படத்தில் கிளாமர் காட்டியுள்ளாராம். இருந்தாலும் இன்னொரு இனிப்பு தந்தால் ரசிகர்கள் வேண்டாம் என்றா கூறப் போகிறார்கள் என்று எண்ணிய இயக்குநர் பாரதி, சுஜாவின் குத்துப் பாட்டையும் படத்தில் வைத்துள்ளார்.

வள்ளுவர் பெயரை படத்துக்கு வைத்து விட்டு கிளாமரும் குத்துப் பாட்டுமா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil