»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

மும்பை இறக்குமதி வானதியுடன் கை கோர்த்து மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் ராஜுசுந்தரம். படத்தின் பெயர்கொலம்பஸ்.

ஐ லவ் யூ டா மூலம் நிஜக் காதலி சிம்ரனுடன் ஜோடி சேர்ந்து ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்த ராஜு சுந்தரம்,கொலம்பஸ் படத்திலும் ஹீரேவாக வலம் வரவுள்ளார்.

தம்பி பிரபு தேவாவைப் பின்பற்றி நடனத்துடன் அவ்வப்போது நடிப்பையும் வழங்க முடிவு செய்ததன்விளைவுதான் கொலம்பஸ்.

பிரண்ட்ஸ் படத்தில் நடித்த விஜயலட்சுமியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

காமடிக்கு விவேக் மற்றும் நந்தா புகழ் லொடக்குபாண்டி கருணாஸ் இருக்கிறார்கள். வில்லனாக தில் புகழ்ஆஷிஷ் வித்யார்த்தி நடிக்கிறார். இளைய இளையராஜா யுவன் ஷங்கர் ராஜா மியூசிக்கைக் கவனிக்கவிருக்கிறார்.

இசை இந்தப் படத்தில் படு வித்தியாசமாக இருக்கும் என்று கூறுகிறார்கள் படத்தின் தயாரிப்பாளர்கள் லோகநாதன்,ராஜகணேஷ். படத்தை இயக்கப் போவது பரதன்.

காதலுடன், அடிதடி சண்டைகளும் நிறைந்த கலவையாக உருவாகவிருக்கிறது கொலம்பஸ். ஜனவரி மாதத்தில்படப்பிடிப்பை ஆரம்பித்து விருட்டென்று முடித்து ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்களாம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil