»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

உலக அழகி நியூஸ் படித்து போர் அடித்துவிட்டதா. இதோ ஒரு ராமநாராயணன் நியூஸ்.

அடுத்தடுத்து அம்மன் படங்களாக எடுத்து இல்லத்தரசிகளை சாமியாட வைத்து வரும் ராம. நாராயணன் அடுத்த வேப்பிலை அம்மன் என்ற படத்தைஎடுக்கவுள்ளார்.

அம்மனாக (ரம்யா கிருஷ்ணன் இல்லை!) ரோஜா சாமியாட ஸாரி .. நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு இரட்டை வேடமாம். அம்மனாக ஒரு ரோஜா,பக்தையாக இன்னொரு ரோஜா.

மற்றொரு நாயகியாக தேவயானி வருகிறார். இவருக்கு ஜோடி கரண். முரட்டுக் கணவரான கரணை அம்மனின் அருள் மூலம் தேவயானிதிருத்துகிறாராம் (அடடே!).

இவர்கள் தவிர பர்ர்ர்ர்ர் வெண்ணிற ஆடை மூர்த்தி, யுவராணி, இளவரசி ஆகியோரும் இருக்கிறார்களாம்.
அதெல்லாம் சரி, அம்மன் படத்தில் கிராபிக்ஸ் இல்லாவிட்டால் எப்படி. அட்டகாசமான கிராபிக்ஸ் காட்சிகள் கண்டிப்பாக உண்டு. அதுவும் அம்மனின்கண்கள், இதுவரை எந்த அம்மன் படத்திலும் வராத அளவுக்கு வித்தியாசமான அளவுக்கு கிராபிக்ஸில் கொண்டு வரப்படவுள்ளதாம்.

தேவா இசையமைக்கிறார். ராம.நாராயணன் இயக்குகிறார். அவரது ஆஸ்தான ஒளிப்பதிவாளர் என்.கே.விஸ்வநாதன் காட்சிகளை சுடுகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil