»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

த்ரீ ரோஸஸ் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டுமானால் மதுரை கந்து வட்டி தாதா அன்புவுக்கு சில கோடிகளைசெட்டில் செய்ய வேண்டிய நிலையில் உள்ள ரம்பா, அதற்கான பணத்தை சம்பாதிக்க எந்த ரோல் கொடுத்தாலும்நடிக்கத் தயார் என்று தமிழ் பட தயாரிப்பாளர்களுக்கு தூதுக்கு மேல் தூது அனுப்பிப் பார்த்தார்.

ஒரு காலத்தில் தொடையழகி ரம்பா சொன்னால் எதையும் செய்யத் தயாராக இருந்த தமிழ் தயாரிப்பாளர்கள்இப்போது அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. முன்பு அவருக்காக அலைந்த ஹீரோக்கள் கூட இப்போதுகண்டுகொள்ளவில்லை.

இதனால் மனம் வெறுத்துப் போய் மலையாளத்தில் சான்ஸ் தேடினார். அங்கு சான்ஸ் கிடைத்தது. பணம் தான்கிடைக்கவில்லை. அங்கு முன்னணி ஹீரோவுக்கே ரூ. 35 லட்சம் தான் சம்பளம். இதனால் ரம்பா போய்மாதக்கணக்கில் கேரளாவில் தங்கி நடித்தாலும் சில லகரங்களுக்கு மேல் தேறவேயில்லை.

இதையடுத்து தமிழையும் மலையாளத்தையும் சபித்துவிட்டு இப்போது தனது பிறந்த வீடான ஆந்திராவில்அடக்கலம் புகுந்துள்ளார். அங்கு ஒரு டான்ஸ் ஆடினாலே பல லட்சங்களைப் பார்த்துவிட முடியும் என்பதால் தனதுதிறமை அனைத்தையும் பயன்படுத்தி தெலுங்கில் சான்ஸ் தேடி வருகிறார் ரம்பா.

குஷ்பூ "பாட்டி" !

குஷ்பூ 100 வயதுப் பாட்டி வேடத்தில் நடிக்கவுள்ளார் - தமிழில் அல்ல கன்னடத்தில்.

டிஜிட்டல் கேமரா மூலம் இந்தப் படம் ஷூட் செய்யப்படவுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக பி.சி.ஸ்ரீராம்தான் தமிழில் வானம் வசப்படும் என்ற படத்தை டிஜிட்டல் கேமரா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திஎடுத்துள்ளார்.

இந்த வரிசையில் கன்னடத்தில் அஜ்ஜி (பாட்டி) என்ற படம் டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்படவுள்ளது.

இந்தப் படத்தில் குஷ்பூ 100 வயதுப் பாட்டி வேடத்தில் தோன்றுகிறார். காமெடி பிளஸ் மாயாஜால வேலைகள்நிறைந்த கதையாக இந்தப் படம் எடுக்கப்படவுள்ளது. கன்னடத்தில் ரிலீஸ் செய்ய்பபட்ட கையோடு விரைவில்தமிழ், தெலுங்கிலும் வரவுள்ளதாம்.

முன்பு தமிழில் கொடி கட்டிப் பறந்த குஷ்புவுக்கு, சான்ஸ் குறைந்தபோது உடனே கன்னடத்துக்கு ஜாகை மாறினார்.குறைந்த சம்பளம் தான் என்றாலும் ரவிச்சந்திரன், விஷ்ணுவர்த்தன் உள்ளிட்ட ஹீரோக்களுடன் பல படங்களில்நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil