»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

பிதாமகன் படத்தில் ஈஸ்வரி ராவை நடிக்க வைத்து பின்னர் அவரைத் தூக்கிவிட்டு மாளவிகாவை நடிக்க வைத்தஇயக்குனர் பாலா, இப்போது மாளவிகாவையும் தூக்கிவிட்டு அந்த ரோலுக்கு ரஷிகாவைப் போட்டுவிட்டாராம்.

தெலுங்கில் இரண்டாவது ஹீரோயின் மற்றும் இரண்டாவது வெவல் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார் ரஷிகா.கவர்ச்சியை அள்ளிக் கொட்டியும் சொல்லிக் கொள்ளும்படி சான்ஸ் இல்லை.

இந் நிலையில் பிதாமகனில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். கள்ளச்சாராயம் விற்கும் பெண்மணியாக இதில்நடிக்கிறார் ரஷிகா. ஒரு பாட்டுக்கு டான்சும் உண்டு.

இந்த ரோலில் முன்பு நடித்த ஈஸ்வரி ராவ் கவர்ச்சியைக் காட்டிய அளவுக்கு நடிப்பில் திறமை காட்டவில்லையாம்,இதனால் அவரைத் திருப்பி அனுப்பினார் பாலா.

பின்னர் மாளவிகாவை வைத்து சில ஷாட்களை எடுத்தபாலாவுக்கு அவரது கெட்-அப் இந்த ரோலுக்கு சரி வரவில்லை என்று தோன்றவே சாரி சொல்லி திருப்பிஅனுப்பிவிட்டார்.

இதையடுத்து பைவ் ஸ்டார் படத்தில் நடித்த மங்கையை அழைத்து வந்தார்கள். ஆனால், மங்கையின் ஓவர்இங்கிலீசு பேச்சும், செட்டில் அவர் காட்டிய பந்தாவும்ம் பாலாவுக்கு எரிச்சலூட்டவே திருப்பி அனுப்பிவிட்டார்.

இதன் பின்னர் ரொம்பவே யோசித்து யோசித்துப் பார்த்து தான் தெலுங்கில் இருந்த ரஷிகாவை இழுத்துவந்தாராம்.

தமிழில் பல படங்களில் குறிப்பாக, பாண்டியராஜனுடன் சேர்ந்து நடித்துள்ள ரஷிகாவுக்குகோலிவுட்டில் போதிய சான்ஸ்கள் கிடைக்கவில்லை. இதனால் சொந்த ஊருக்குப் போயிருந்தார்.

இப்போது அங்கு தன் பெயரை சங்கீதா என்று மாற்றிக் கொண்டுள்ளார். பிதாமகனின் இவர் முழுமையாக நடித்துமுடித்தால் (பாலா ஆளை மாற்றாமல் இருந்தால்) டைட்டிலில் சங்கீதா என்று தான் போடுவார்களாம்.

ரஷிகாவையாவது முழுசாக நடிக்க விடுவாரா பாலா என்று தெரியவில்லை.

முதலில் சூர்யாவின் கால்ஷீட்டை வாங்கி வைத்துவிட்ட பாலாவுக்கு, விக்ரம் கால்ஷீட் தராமல் இழுத்தடித்தார்.இதனால் படப் பிடிப்பு தாமதமானது. பின்னர் ஹீரோயின் யார் என்பதில் படு குழப்பம் நிலவியது. இறுதியில்பாலாவின் (விக்ரமுக்கும் தான்) பேவரிட்டான் லைலா புக் செய்யப்பட்டார். இதையடுத்து ஈஸ்வரி ராவ்,மாளவிகா, மங்கை, ரஷிகா என ஒரு கேரக்டருக்கு நான்கு பேர் மாற்றப்பட்டனர்.

ஆரம்பத்தில் மிக மெதுவாக நடந்த பிதாமகன் படிப்பிடிப்பு இப்போது தேனி பகுதியில் படு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

சேது, நந்தா என அடுத்தடுத்து வித்தியாசமான படங்களைத் தந்த பாலா மீதான எதிர்பார்ப்பை மிகவும்அதிகரித்துள்ள படம் பிதாமகன்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil