»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷங்கரின் பாய்ஸ் ஒரு வழியாக ரெடியாகி விட்டதாம்.

ஷங்கரின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டுக்களையும், ரீ-ரெக்கார்டிங்கையும் முடித்துக்கொடுத்து விட்டாராம். படமும் நன்றாக வந்துள்ளதால் ஷங்கருக்கும் திருப்தி. இருப்பினும் படம் ரொம்ப நீளமாகஇருப்பதாக ஷங்கரிடம் ரகுமான் தெரிவித்தாராம்.

இதையடுத்து சில காட்சிகளை வெட்டிவிட்டு நீளத்தைக் குறைக்கும் வேலை நடந்து கொண்டுள்ளது. காட்சிகளைஷார்ப் ஆக்க சில காட்சிகள் புதிதாக எடுக்கப்படலாம் என்கிறார்கள்.

சுதந்திர தினத்தன்று படத்தை ரிலீஸ் செய்ய சங்கர் திட்டமிட்டுள்ளார். ஏ.எம். ரத்னம் தயாரிக்க புத்தம்புதியவர்களை வைத்து கிட்டத்தட்ட ஓரண்டுக்கு முன் பாய்ஸ் படத்தை ஷங்கர் தொடங்கினார்.

சித்தார்த், நகுல்(நடிகை தேவயானியின் தம்பி), சாய், பரத், மணிகண்டன், அனிதா என்ற 6 புதுமுகங்களைப் போட்டு மீடியம்பட்ஜெட்டில் படத்தை ஆரம்பித்தார்.

டான்ஸ், பாட்டு, மியூசிக்கில் இந்த ஆறு பேருமே கில்லாடிகள். பின்னர் சிந்தூரி என்ற புதுமுகமும் சேர்க்கப்பட்டார்.

ஆனால், படம் ரொம்ப நாளாய் இழுத்தடிக்கப்பட்டது. இதனால் படமே ட்ராப் செய்யப்பட்டதாக தகவல்கள்பரவின.

மேலும் பாய்ஸ் பட பாணியைக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் புகுந்து விளையாட இந்தப் படபாணியிலேயே இடையில் பல படங்கள் வந்து விட்டன.

இதனால் அவற்றின் பாதிப்பு பாய்ஸில் இருக்கக் கூடாது என்பதற்காக கதையில் நிறைய மாற்றங்கள் செய்தாராம்ஷங்கர். இதனால் படம் மேலும் இழுத்துக் கொண்டே போனது.

படத்துக்கு வசனம் எழுதிய சுஜாதா உடல் நலம்குன்றியதாலும் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டதாம்.

இந் நிலையில் இந்தப் படத்தில் புக் ஆன புதுமுகம் சிந்தூரியை மும்தாஜுக்கு மிகவும் பிடித்துப் போய்விடஷகங்கரிடம் பேசி, அவரை தனது தத்தித் தாவுது மனசு படத்தில் நடிக்க வைத்துவிட்டார் மும்தாஜ்.

இந்தப் படத்தில் 6 ஹீரோக்கள் நடித்தாலும் உண்மையான ஹீரோ ஏ.ஆர். ரகுமான் தானாம். ஷங்கருக்குஎப்போதுமே ஸ்பெஷல் மியூசிக் போடும் ரகுமான் தன் பங்குக்கு இதில் ஜமாய்த்துள்ளாராம்.

ஆனால், இசைக்குரொம்பக் காலம் எடுத்துக் கொண்டுவிட்டது வேறு கதை. படத்தில் மொத்தம் 10 பாடல்கள். இதில் 4 பாடல்கள்சின்ன கவிதைகள் மாதிரியாம்.

ஹிந்து பாப் புகழ் அட்னான் சாமியையும் பாட வைத்துள்ளார் ரகுமான்.

ஜோதிகாவும் படத்தில் குட்டி ரோலில் எட்டிப் பார்ப்பதாக செய்தி. டீன் ஏஜ் சேட்டைகள், குழப்பங்கள் தான்கதையாம்.

பாய்ஸ் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டா இருந்தா சரி தான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil