»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

அஜீத் நடிக்கும் ரெட் படம் குறித்து உங்களுக்குத் தெரியும். ஆனால் அந்தப் படத்தை இயக்கி வரும் டைரக்டரின் பெயர் சிங்கம்புலி என்பது உங்களுக்குத்தெரியுமா? இந்த சிங்கம்புலிக்கு ஒரு மாண்புமிகு பின்னணி உள்ளது.

இந்த சிங்கம்புலி சுந்தர். சியிடம் அசிஸ்டன்டாக இருந்தவர். பெரியகுளத்தைச் சேர்ந்தவர். இன்னும் புரியலியா?. நம்ம முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சிங்கம்புலிக்குமாமா முறையாம்.

மாமா தான் அநியாயத்துக்கு அமைதியாக இருக்கிறார். இந்தச் சிங்கமாவது பாயுமா?

குரங்குடன் சண்டை போட்ட கார்த்திக்

குட்டி பத்மினி தயாரிக்கும் முதல் படமான காதலே சுவாசம் படத்தின் படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. முழுப் படப்பிடிப்பும் அங்குதான் நடந்தது.

சமீபத்தில் ஒரு டூயட்டை அங்குள்ள ஒரு மலை மீது நடத்தினார்கள். இதற்காக ஹீரோ கார்த்திக்கையும், ஹீரோயின் மீனா மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்சிலர் ஹெலிகாப்டர் மூலம் மலைக்குக் கொண்டு வரப்பட்டு ஷூட்டிங் எடுக்கப்பட்டது.

ஆப்பிரிக்காவில் நம்முடைய மூதாதையர்கள் (அதாங்க கருங்குரங்குகள்) ஜாஸ்தி என்பதால் ஜாக்கிரதையாக படம்பிடிக்குமாறு குட்டி அன் கோவிற்குஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும் பலத்த காவலையும் மீறு ஒரு குரங்கார் ஷூட்டிங் ஸ்பாட்டிற்குள் ஊடுறுவி விட்டார். அத்தோடு நில்லாமல் மீனாவை டீஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.மீனா பயந்து போய் ஓட ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

ஹீரோ கார்த்திக் சும்மா இருந்தால் நன்றாக இருக்குமா? அருகிலிருந்த ஒரு கட்டையை எடுத்து குரங்கை துரத்தத் தொடங்கினார். கருங்குரங்கு கடித்தால்அவ்வளவுதான் என்றாலும் கூட பயமில்லாமல், துணிச்சலோடு குரங்கை வேறு பக்கமாக துரத்தி விட்டுத்தான் வந்தார் கார்த்திக்.

கருங்குரங்கைத் துரத்தி தன்னை மீட்ட கார்த்திக்கை மீனா நன்றி கலந்த ஒரு லுக் விட்டு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

லுக்கு லுக்கு லுக்கூ...

விவரமான ஆளு!

உங்கள் சத்யராஜ் அடுத்து நடிக்கவிருக்கும் படம் விவரமான ஆளு.

என்னம்மா கண்ணு, லூட்டி போன்ற கருத்தாழமிக்க வசனங்களைக் கொண்ட படங்களைத் தயாரித்த துரைராஜ், இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.

எ.க, லூட்டி போல இந்த படத்திலும் சத்யராஜ் ஸ்பெஷ் வசனங்கள் நிறைய இடம் பெறும் என்று தெரிகிறது. சத்யராஜுக்கு இந்தப் படத்தில் இரண்டுஜோடிகள். ஒன்று தேவயானி, இன்னொன்று மும்தாஜ்.

இவர்கள் தவிர செந்தில், விவேக், பிரதாப், வினுச்சக்கரவர்த்தி, பொன்னம்பலம், மயில்சாமி, வையாபுரி ஆகியோரும் உள்ளனர்.

தேவா இசையமைக்கவுள்ளதால் இன்னொரு கட்டிப்புடி கட்டிப்புடிடா ஸ்டைல் பாட்டை எதிர்பார்க்கலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil