»   »  எமகோலா ரீமா!

எமகோலா ரீமா!

Subscribe to Oneindia Tamil

கிளாமரில் புது அழகு காட்டி ரீமா சென் தெலுங்கில் உருவாகியுள்ள எமகோலா என்ற படத்தில் விளையாடியுள்ளாராம்.

தமிழில் சற்றே மார்க்கெட் தடுமாற்றம் கண்டிருப்பதால் டக்கென தெலுங்குக்குத் தாவி விட்டார் ரீமா. அங்கு ஏற்கனவே அவர் அதகளம் பண்ணிய அனுபவம் இருப்பதால் இன்னும் நல்ல டிமாண்டில்தான் உள்ளார்.

எமகோலா என்ற படத்தில் கிளாமரில் பிரித்து மேய்ந்து வருகிறாராம் ரீமா. படத்தின் நாயகி மீரா ஜாஸ்மின். கிளாமர் போர்ஷனின் தனிப்பெரும் நாயகியாக ரீமா நடித்துள்ளார்.

மீரா ஜாஸ்மின் என்ற பெரும் நடிகை படத்தில் இருக்கையில், எப்படி இப்படி ஒரு படத்தை ஒத்துக் கொண்டீர்கள் என்று கேட்டால், யார் இருந்தால் எனக்கென்ன. என் வழி தனி வழி. அதில் யாரும் குறுக்கே வர முடியாது.

தெலுங்கு ரசிகர்கள் என்னிடம் என்ன பார்ப்பார்கள், மீரா ஜாஸ்மினிடம் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது, போட்டியும் இல்லை.

எனது கிளாமருக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு உண்டு. அதற்கேற்ப எமகோலா படத்திலும் கிளாமரில் புது அழகு காட்டி திறம்படி நடித்துள்ளேன். இருந்தாலும் நடிப்பதற்கும் நல்ல வாய்ப்பு உள்ளது.

வெறும் கிளாமரை நான் விரும்புவதில்லை. நடிக்கவும் நல்ல ஸ்கோப் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட படங்களில்தான் நடிப்பேன் என்கிறார் ரீமா.

தெலுங்கு தவிர இந்தியிலும் ஒரு படத்தில் நடித்து விட்டார் ரீமா. அதில் நாயகன் மார்க்கண்டேயன் கோவிந்தா. சல் சலோ சல் என்ற அந்தப் படத்தில் காமெடியில் கிளுகிளுப்பூட்டியுள்ளாராம் ரீமா.

எனக்கென்று எந்த இமேஜும் வரக் கூடாது. அதற்காகத்தான் விதம் விதமான கேரக்டர்களில் கலந்து கட்டி நடிக்கிறேன் என்கிறார் வசீகரப் புன்னகையுடன் ரீமா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil