»   »  மும்முனை போட்டியில் ரீமா

மும்முனை போட்டியில் ரீமா

Posted By:
Subscribe to Oneindia Tamil

இவன் யாரோ படத்தில் ரீமா சென், கஜாலா, புளோரா ஆகியோர் மும்முனைப் போட்டியில் குதித்துள்ளனர்.

செல்லமே படத்திற்குப் பின் தனது சம்பளத்தை 35 லட்சமாக ஏற்றிய ரீமா சென், தெலுங்கில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

இப்போது இவன் யாரோ படத்திற்காக மீண்டும் தமிழுக்கு வருகிறார். இந்தப் படத்தில் தருண் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரீமா சென், கஜாலா, புளோரா ஆகியோர் நடிக்கிறார்கள்.

பிப்த் சவுண்ட் மீடியாஸ் பட நிறுவனம் சார்பில் அருண் பாலாஜி இந்தப் படத்தை தயாரிக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் சேகர் சூரி.

படத்தில் பிரகாஷ்ராஜ், ஜெயசித்ரா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். பல தடைகளைத் தாண்டி ஊரை விட்டு ஓடிவரும் காதலர்கள், நகரத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தான் படத்தின் கதை.

தினாவின் மெட்டுக்கு யுகபாரதி, செந்தில் குமாரசாமி ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். மைசூர், குலுமணாலி, கோவா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு வேகமாக நடைபெறுகிறது. அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது.

ஆள் இத்துணூண்டாய் இருந்தாலும் கவர்ச்சியில் கலக்கக் கூடியவர் கஜாலா. புளோரா பற்றி சொல்லவே வேண்டாம். நடிப்பது என்றாலே தரிசனம் தருவது தான் என்று நினைப்பர். இதனால் இருவருமே படத்தில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

செல்லமே மூலம் தனக்கு நடிப்பும் வரும் என்பதை தமிழ் கூறும் நல்லுலகுக்கு தெரியப்படுத்திவிட்ட ரீமா சென் இந்த இருவரின் கவர்ச்சிக் களியாட்டங்களுக்கு ஈடு கொடுத்து கலக்கி வருகிறாராம்.

இந்தப் படத்திற்கு அடுத்ததாக ரீமா சென், சுந்தர்.சியின் இயக்கத்தில் ஒரு படம் நடிப்பார் என்று தெரிகிறது.

தான் இயக்கி வரும் லண்டன், தகதிமிதா இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகாத நிலையில் சின்னா என்று 3வதாக சின்னா என்ற படத்திற்கு சுந்தர்.சி பூஜை போட்டுள்ளார். மினிமம் கியாரண்டி படங்களைத் தருவதில் கே.எஸ்.ரவிக்குமாருக்கு இணையானவர் என்ற பெயர் சுந்தர்.சிக்கு உள்ளதால் தயாரிப்பாளர்கள் தைரியமாக பணத்தைக் கொட்டுகிறார்கள்.

சின்னா படத்தில் கதாநாயகன் அர்ஜூன். இவருக்கு ஜோடியாக ரீமா சென் நடிக்கிறார்.

தகதிமிதா ஏறக்குறைய முடிந்துவிட்டதால், அந்தப் படத்தை முதலிலும் அதற்கடுத்தாக லண்டன், சின்னா ஆகிய படங்களையும் வெளியிட சுந்தர்.சி திட்டமிட்டிருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil