»   »  ரீமாவின் நியூ லுக்!

ரீமாவின் நியூ லுக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமா சென் இதுவரை இல்லாத அளவில் புதுவிதமான கெட்டப்புடன், புதுப் பொலிவுடன் தோன்றப் போகிறார்.

ரீமா சென்னை பொலிவாக்கிய பெருமை சென்னையைச் சேர்ந்த பேஷன் டிசைனர் எரும் அலியையே சாரும்.

சின்ன இடைவெளிக்குப் பின்னர் செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிக்கிறார் ரீமா சென் (சந்தியாவைத் தூக்கி விட்டு ரீமாவைப் போட்டுள்ளார் செல்வா). அவருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பவர் கார்த்தி.

இப்படத்தின் ஷூட்டிங் சத்தம் போடாமல் கடந்த வாரம் சென்னையில் தொடங்கி விட்டது. இப்படத்தில் ரீமாவை புதுப் பொலிவுடன், சற்று வித்தியாசமாக காட்ட நினைத்தார் செல்வா. இதையடுத்து எரும் அலியுடன், பொலிவு மாற தீர்மானித்தார் ரீமா.

ஒரு வார கால முயற்சிகளுக்குப் பின்னர் ரீமாவை படு வித்தியாசமாக மாற்றி விட்டார் எரும் அலி. புதுப் பொலிவுடன் வந்து நின்ற ரீமாவைப் பார்த்து செல்வா அசந்து போய் விட்டாராம். அவர் மட்டுமல்ல மொத்த யூனிட்டுமே வாய் பிளந்து அடடா என்று வியந்து போனதாம்.

சொன்னதை சட்டென்று செய்து விட்டு வந்து நின்ற ரீமாவின் தொழில் பக்தியைப் பாராட்டித் தள்ளி விட்டாராம் செல்வா.

ரீமாவின் கன்னத்தில் சில நுணுக்கமான வேலைப்பாடுகளைச் செய்து அதை மெருகேற்றியுள்ளாராம் அலி. இதனால் ரீமாவின் அழகு கூடிப் போய் விட்டதாம்.

இந்தப் படத்தில் நாயகிக்கு முக்கியமான ரோல் வைக்கப்பட்டுள்ளதாம். இதனால்தான் ரீமாவை மாற்ற விரும்பினாராம் செல்வா. அதேபோல தனது கேரக்டரின் முக்கியத்துவத்தை உணர்ந்த ரீமாவும், அதற்கேற்றார் போல தன்னை மாற்றிக் கொள்ள ஆர்வம் காட்டினாராம்.

இப்படத்துக்காக சம்பளம் கூடப் பேசாமல் ஒட்டுமொத்தமாக கால்ஷீட்டைக் கொடுத்துள்ளார் ரீமா.

இதுகுறித்து ரீமா கூறுகையில், இப்படிப்பட்ட கேரக்டர்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும். எனக்கு அது இப்போது கிடைத்துள்ளது. செல்வராகவன் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். நிச்சயமாக அதற்கு உரிய வகையில் நடிப்பேன், அசத்துவேன் என்றார்.

படத்துக்கு இசை வழக்கம் போல யுவன் ஷங்கர் ராஜாதான். 6 பாடல்களைப் போட்டுக் கொடுக்கவுள்ளார்.

ராம்ஜி முதல் முறையாக செல்வா படத்துக்கு கேமராவைக் கையாளுகிறார் (வழக்கமான அரவிந்த் கிருஷ்ணாவோடு, செல்வா ஊடல் கொண்டுள்ளதால் அவர் இப்படத்தில் இல்லை). பொங்கல் விருந்தாக ஆயிரத்தில் ஒருவனைப் படைக்கவுள்ளார் செல்வா.

எந்த பொங்கல் என்று செல்வா சொல்லலையே?!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil