»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

செல்லமே படத்தின் மூலம் மீண்டும் தமிழில் கதாநாயகியாக காலடி எடுத்து வைக்கிறார் ரீமா சென். மின்னலேமூலம் ஹீரோயினாக அறிமுகமாகி அடுத்த படத்தில் சறுக்கி, செகண்ட் ஹீரோயின், ஒரு பாட்டுக்கு டான்ஸ்அளவுக்கு சுருங்கியவர் ரீமா.

இப்போது இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கும் செல்லமே மூலம் ஹீரோயினாக ரீ எண்ட்ரி செய்கிறார். காந்திகிருஷ்ணாவை தீவிர சினிமா ரசிகர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள்.

ஷங்கரிடம் இணைஇயக்குநராக ஜெண்டில்மேன், காதலன், இந்தியன் ஆகிய படங்களில் பணியாற்றியவர்.

இந்தியன் படத்துக்குப் பிறகு தனியே படம் பண்ண விரும்பினார் காந்திகிருஷ்ணா. தென்னிந்தியதிரைப்படங்களில் நடிக்க ஆர்வமில்லாமல் இருந்த மாதுரி தீட்சித்தை தான் கூறிய கதை மூலம் தமிழில் நடிக்கஒத்துக் கொள்ள வைத்தார். அவருக்கு ஜோடியாக அரவிந்த்சாமியையும், இசைக்கு ஏ.ஆர்,ரஹ்மானையும் புக்செய்து அமர்க்களமாக படத்தை ஆரம்பித்தார். என்ஜீனியர் என்று படத்துக்கு பெயர் வைத்தார்.

யார் கண்பட்டதோ என்ஜீனியர் படம் டிராப் ஆனது. இது நடந்தது 6 வருடங்களுக்கு முன்பு. இப்போதுகாந்திகிருஷ்ணா செல்லமே படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். கதாநாயகியாக ரீமா சென் நடிக்க, அவரைசெல்லமே என்று கொஞ்சுபவர் புதுமுகம் விஷால்.

இவர்களுடன் கிரீஷ் கர்னாட், விவேக், மும்தாஜ் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஹாரீஸ் ஜெயராஜ்இசையமைக்கிறார். காந்தி கிருஷ்ணாவின் கதை, திரைக்கதைக்கு சுஜாதா வசனம் எழுதுகிறார். காதல், ஆக்ஷன்,இசை ஆகிவற்றுக்கு முக்கியவத்துவம் கொடுத்து இப்படத்தை இயக்குவதாக காந்திகிருஷ்ணா கூறியுள்ளார்.படப்பிடிப்பை சென்னை, கோவா, மும்பை, பாங்காக், மாலத்தீவு ஆகிய இடங்களில் நடத்துகிறார்கள்.

மின்னலேவுக்குப் பின் விஜய்யுடன் பகவதி படத்தில் நடிக்க ரீமாவுக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், படம்படுதோல்வி. இதனால் இவரை சீண்டுவார் இல்லாமல் போகவே தெலுங்குக்குப் போனார். இடையில் விக்ரமுடன்தூள் படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. அதில் செகண்ட் ஹீரோயின் ரோல் தான் கிடைத்தது, என்றாலும் ரீமாவின்கவர்ச்சி வெகுவாக பேசப்பட்டது.

இதையடுத்து கவர்ச்சி + குறும்பு + நடிப்பு என்று கலந்து கட்டி நடிப்பதற்கு ரீமாதான் சரி என்று தயாரிப்பாளர்கள்அவரை நாடி போனபோது ரூ. 30 லட்சம் கேட்டு மிரட்டினார். தயாரிப்பாளர்கள் பின் வாங்கவே, தமிழில்வாய்ப்புக்கள் இல்லாமல் போயின. அதே நேரத்தில் தெலுங்குவாலாக்கள் கேட்ட பணத்தைக் கொடுத்து ரீமாவைதொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

ஹீரோக்களுக்கும் வசியம் போடுவதில் இவர் நம்பர் ஒன் என்பதால் தெலுங்கில் வாய்ப்புக்களுக்கு குறைவேஇல்லை.

இந்த நிலையில் செல்லமே படத்துக்காக கேட்ட பணத்தைத் தந்து புக் செய்து அழைத்து வந்திருக்கிறார் காந்திகிருஷ்ணா. இதில் இஷ்டத்துக்கு புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார் செல்லம் ரீமா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil