40 நாள்.. ஒரே ஷெட்யூல்.. வீட்ல விசேஷங்க படத்தை முடித்த ஆர்.ஜே. பாலாஜி.. எப்போ ரிலீஸ் தெரியுமா?
சென்னை: எல்கேஜி, மூக்குத்தி அம்மன் என பேக் டு பேக் ஹிட் கொடுத்த ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷங்க படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக அவரே ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ஆயுஷ் குரானா நடிப்பில் வெளியான பதாய் ஹோ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம்.
இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக சூரரைப் போற்று படத்தில் பொம்மியாக நடித்து அசத்திய அபர்ணா பாலமுரளி நடித்து வருகிறார்.

ஆர்ஜே டு ஹீரோ
பிரபல தனியார் ரேடியோ சேனலில் ஆர்ஜேவாக கலக்கி வந்த பாலாஜி புத்தகம் படத்தில் வெறும் வாய்ஸ் மட்டும் கொடுத்து குரலாக சினிமாவில் அறிமுகமானார். எதிர்நீச்சல், தீயா வேலை செய்யணும் குமாரு, இது என்ன மாயம், நானும் ரவுடி தான், தேவ, இவன் தந்திரன், ஸ்பைடர், வேலைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடித்து வந்த ஆர்ஜே பாலாஜி எல்கேஜி படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார்.

அரசியல் நய்யாண்டி
இயக்குநர் கே.ஆர். பிரபு இயக்கத்தில் லால்குடி கருப்பையா காந்தி எனும் பெயரின் சுருக்கமான எல்கேஜி எனும் தலைப்பில் ஹீரோவாக நடித்த ஆர்ஜே பாலாஜிக்கு ஆரம்பமே அசத்தலாக மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருந்தார். ஏகப்பட்ட அரசியல் நய்யாண்டி கருத்துக்களை வைத்து இந்த படம் உருவாகி இருந்தது.

நயன்தாராவுடன் இணைந்து
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து காமெடி காட்சிகளில் கலக்கிய ஆர்ஜே பாலாஜி இயக்குநராக அறிமுகமான மூக்குத்தி அம்மன் படத்திலும் நயன்தாராவுடன் இணைந்து நல்ல நடிப்பை வெளிப்படுத்தி படத்தை ஹிட் ஆக்கினார்.

வலிமை தயாரிப்பாளர்
எல்கேஜி, மூக்குத்தி அம்மன் ஹிட் அடித்த நிலையில், மூன்றாவது முறையாக ஹீரோவாக நடித்து வருகிறார் ஆர்ஜே பாலாஜி. வலிமை படத்தின் தயாரிப்பில் போனி கபூர், ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை உருவாக்கி வருகின்றனர்.

வீட்ல விசேஷங்க
ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி ஹிட்டான பதாய் ஹோ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம். ஆயுஷ்மான் குரானா, சான்யா மல்கோத்ரா நடிப்பில் வெளியாகி காமெடியில் கலக்கிய பதாய் ஹோ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்ஜே பாலாஜி நடித்து வருகிறார். இந்த படத்தில் யோகி பாபு ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்து காமெடியில் கலக்க உள்ளார்.
Recommended Video

சூரரைப் போற்று பொம்மி
சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தில் பொம்மியாக நடித்து மிரட்டிய அபர்ணா பாலமுரளி வீட்ல விசேஷங்க படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் தொடர்பான அட்டகாச அறிவிப்பை ஆர்ஜே பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

40 நாளில் படம் ரெடி
முழுக்க முழுக்க இந்த படம் கோயம்புத்தூரில் தான் படமாக்கப்பட்டுள்ளது. வெறும் 40 நாட்களில் ஒரே கட்ட படப்பிடிப்பாக தொடர்ந்து நடைபெற்ற வீட்ல விசேஷங்க படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக ஆர்ஜே பாலாஜி அட்டகாச அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரும் 2022ம் ஆண்டு இந்த படம் வெளியாகி அந்த ஆண்டின் சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











